ETV Bharat / state

திருநெல்வேலியில் மாணவர் உயிரிழந்த விவகாரம் - முதலமைச்சருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

author img

By

Published : May 4, 2022, 2:13 PM IST

Physical education teachers association letter to Chief Minister why-no-action-has-been-taken-against-headmaster-in-case-of-death-of-12th-class-student-in-death-in-tirunelveli திருநெல்வேலியில் மாணவர் உயிரிழந்த விவகாரம் தலைமை ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்
Physical education teachers association letter to Chief Minister why-no-action-has-been-taken-against-headmaster-in-case-of-death-of-12th-class-student-in-death-in-tirunelveli திருநெல்வேலியில் மாணவர் உயிரிழந்த விவகாரம் தலைமை ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் நடைபெற்ற சண்டையில் 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் அதற்கு பொறுப்பான தலைமை ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் முதலமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செல்வ சூர்யா அருகில் உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி பள்ளியில் கையில் சாதி ரீதியான கயிறு கட்டுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மாணவன் செல்வ சூர்யாவுக்கும், அதே பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 1 மாணவர்கள் மூன்று பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் செல்வ சூர்யா கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் (ஏப்ரல்.30) உயிரிழந்தார்.

செல்வ சூர்யா சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இன்று (மே.4) முதலமைச்சருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் எழுதி உள்ள கடிதத்தில்," திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்
உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்

சிகிச்சைக்குப் பின்பு பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு சண்டையிட்ட மாணவர்களிடம் சமாதானமாக செல்வதற்கான எழுத்துப்பூர்வமா கடிதங்கள் பெறப்பட்டன. இரண்டு தினங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மாணவனுக்கு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அகால மரணம் அடைந்தார். மரணம் என்பது யாராலும் ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.

இந்தப்பள்ளி மேல் நிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று பணியிடம் இல்லை. இப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும் முதுகலை பட்டதாரிக்கான ஊதியம் பெறாதவர்கள். மேல்நிலை வகுப்புகளைக் கையாளக்கூடிய உடற்கல்வியில் உயர் கல்வி பயிலாதவர்கள்.

மாணவர்கள் நலன் கருதி, சமுதாய அக்கறையோடு மேல்நிலை வகுப்பு மாணவர்களைப் பார்த்துக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் வழங்கிய சன்மானம் பணியிடை நீக்கம். இந்தப்பள்ளியில் நடந்த மரணத்திற்கு உடற்கல்வி இயக்குநர்கள் இல்லாததுதான் காரணம்.

அரசின் உத்தரவின்படி உணவு இடைவேளையின் மற்றும் சிறு இடைவேளை போன்ற நேரங்களில் அனைத்து ஆசிரியர்களும் குழு அமைத்து மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். இந்தப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்பதால் தலைமையாசிரியர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தலைமையாசிரியர் இல்லாதபட்சத்தில் பொறுப்பு வகிக்கும் உதவித் தலைமையாசிரியர் பொறுப்பேற்க வேண்டும்.

திருநெல்வேலியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்
திருநெல்வேலியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்

மேலும் மாணவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டது ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு முன்புதான். இங்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால் முதலில் உதவி தலைமையாசிரியர், அதைத்தொடர்ந்து மேல்நிலை பள்ளி மாணவர்களை கையாளக்கூடிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தான். ஆனால் பள்ளி இடைவேளை நேரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் மேல் எந்தவித விசாரணையுமின்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்ய ஆணை வழங்கி இருப்பது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வியில் முதுகலைப் பட்டப் படிப்பான எம்பி, எட் கல்வித் தகுதியுடன் உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடம் வழங்க வேண்டும். 1980ல் 400 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட போது பள்ளி ஒன்றுக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர் என்று நியமிக்கப்பட்டர். மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம். அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டு தான் 100 பணியிடங்கள் வழங்கப்பட்டது.

அப்போது 6 லட்சம் மாணவர்கள் இருந்தனர். தற்பொழுது மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி இயக்குநர் பணியிடம் வழங்கப்படவில்லை. பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர் என்று வழங்கப்பட்டாலும் சுமார் 4000 உடற்கல்வி இயக்குநர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கவேண்டும். தற்பொழுது 650 உடற்கல்வி இயக்குநர்கள் தான் உள்ளனர்.

அதேபோல் பணியாற்றிக் கொண்டு இருக்கக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்களிடையே முழு கல்வித் தகுதி உடைய உடற்கல்வி ஆசிரியர்களை உடற்கல்வி இயக்குநர்களாகத் தரம் உயர்த்தி ஆணை வழங்கலாம், இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை. மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு அமைத்து ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

மேலும் உடனடியாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆணையைத் திரும்பப்பெற வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்" என அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: 'எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் பெருமை அடைந்திருப்பேன்' - உயிரிழந்த மாணவரின் தாய் உருக்கம்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.