ETV Bharat / state

'எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் பெருமை அடைந்திருப்பேன்' - உயிரிழந்த மாணவரின் தாய் உருக்கம்!

author img

By

Published : May 2, 2022, 9:55 PM IST

'எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன்' நெல்லையில் பள்ளி மாணவன் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் பெருமை அடைந்திருப்பேன்'
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பெற்றோர்

திருநெல்வேலி: பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் செல்வ சூர்யா (17). இவர், பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சாதி ரீதியாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். இதையடுத்து மூன்று மாணவர்களையும் காவல் துறையினர் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் எனவே ஆசிரியர்கள் மற்றும் தனது மகனை கொலை செய்த மூன்று மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த மாணவரின் பெற்றோர் இன்று (மே 02) மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து உயிரிழந்த மாணவரின் தாய் உச்சிமாகாளி அளித்த பேட்டியில், “எனது மகன் நன்றாகப் படிப்பான். பணம் இல்லாததால் அரசுப்பள்ளியில் படிக்க வைத்தோம். பரீட்சை எழுதச்சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை. சம்பவம் நடந்து 2 மணி நேரமாக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்சுக்கு காத்துள்ளனர். ஆசிரியர் காரில் தான் வந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் எனது மகனைக் காப்பாற்றியிருக்கலாம்.

பசங்க தான் என் மகனை அழைத்துச்சென்றுள்ளனர். காவல் துறையினரும் தகவல் சொல்லவில்லை. எனது மகன் யாரிடமும் வம்புக்குப் போகமாட்டான். அந்த அளவுக்கு எங்கள் நிலைமை வறுமையில் உள்ளது. எனது கணவர் ராணுவத்தில் சேர நினைத்தார். அவரால் முடியவில்லை. எனவே, எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து நாட்டுக்காக உழைக்க வைக்க நினைத்தோம்.

ஆனால், எனது மகனை படுகொலை செய்துவிட்டனர். இனிமேல், வேறு எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனவே அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் எனது மகனைக் கொன்ற மாணவர்கள் மீது தக்க தண்டனை கொடுக்க வேண்டும். அவனை கொடூரமாக அடித்துள்ளனர். எனது மகனை நாட்டுக்காக இழந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன். வேறு எந்த பெற்றோருக்கும் இந்நிலை வரக்கூடாது” என வேதனையுடன் தெரிவித்தார்.

எனது மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் பெருமை அடைந்திருப்பேன்'

இது குறித்து மாணவனின் உறவினர் மணிகண்டன் கூறும்போது, “இச்சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவனையும் ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். அடித்தது மாணவன் என்றாலும் கொலை செய்யும் அளவுக்கு நடக்கக்கூடாது. எனவே, ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவன் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் - ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.