ETV Bharat / state

Rope pulling: ரோப் புல்லிங் மரியாதை என்றால் என்ன?

author img

By

Published : Jul 1, 2023, 7:46 AM IST

Updated : Jul 1, 2023, 7:26 PM IST

Rope pulling
ரோப் புல்லிங் மரியாதை

தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு மற்றும் அவரது மனைவிக்கு காவல் துறை சார்பில் ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்பட்டது. ரோப் புல்லிங் என்றால் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Rope pulling: ரோப் புல்லிங் மரியாதை என்றால் என்ன?

சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் 36 ஆண்டுகளாக பணியாற்றிய தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஓய்வு பெற்றார். அப்போது ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு மற்றும் அவரது மனைவியை காரில் அமர வைத்து தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் கயிறு மூலமாக காரை இழுத்து ரோப் புல்லிங் மரியாதையை செலுத்தினர்.

ரோப் புல்லிங் மரியாதை என்றால் என்ன? ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆவது என்பது கனவாகவே இருந்து வருகிறது. ஆனால். அனைவருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு கிடைப்பதுண்டு. அத்தகைய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ரோப் புல்லிங் என்ற மரியாதை வழங்கப்படுவது உண்டு.

அதாவது, ஓய்வு பெறும் அதிகாரி மற்றும் அவரது மனைவியை காரில் அமர வைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவருமே கயிறு மூலம் காரை இழுத்து டிஜிபி அலுவலக வாசலுக்கு கொண்டு சென்று விடுவதுதான் ரோப் புல்லிங் மரியாதை. இதில் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி போன்ற உயர் அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரிகள் கயிறு மூலம் காரை இழுத்து ஓய்வு பெறுகிற டிஜிபிக்கு மரியாதை செலுத்தி பெருமைப்படுத்துவர்.

குறிப்பாக, பல ஆண்டுகளாக காவல் துறையில் காக்கிச் சீருடையுடன் வந்து பணியாற்றிய காவல் அதிகாரி, கடைசியாக காக்கி சீருடையுடன் அலுவலகத்திற்கு வரும் கடைசி தருணத்தை அவரது வாழ்நாள் முழுவதும் நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் மகிழ்ச்சியானதாக மாற்றுவதே ரோப் புல்லிங் மரியாதையின் நோக்கமாகவே உள்ளது.

அந்த தருணத்தை அதிகாரியின் மனைவியும் அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர்களின் மனைவியும் காரில் அமர வைக்கப்படுகிறார். குறிப்பாக, இந்த ரோப் புல்லிங் மரியாதை என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே அதாவது 18ஆம் நூற்றாண்டில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது ஐஜி அந்தஸ்தில் இருந்த நேரத்தில், 1874ஆம் ஆண்டு ராபின்சன் என்பவர் சென்னை மாகாண காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்றார்.

பின்னர், அவர் ஓய்வு பெற்றபோது அவருக்கு முதன் முறையாக ரோப் புல்லிங் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது வரை தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் அனைத்து அதிகாரிகளுக்கும் ரோப் புல்லிங் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏடிஜிபி, ஐஜி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரிகளும் விருப்பப்பட்டால் ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்படும் என போலீசார் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ - உயர் கல்வித்துறை அறிவிப்பு!

Last Updated :Jul 1, 2023, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.