ETV Bharat / state

ஹிஜாப் விவகாரம்: நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை!

author img

By

Published : Feb 11, 2022, 9:21 AM IST

கர்நாடகா ஹிஜாப் விவகாரம்: நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை!
கர்நாடகா ஹிஜாப் விவகாரம்: நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை!

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்துள்ள சட்டத்தை உடனடியாக நீக்காவிட்டால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை: கர்நாடகாவில் பூதாகரமாக உருவெடுத்துள்ள ஹிஜாப் விவகாரத்தில், கர்நாடக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கண்டித்து, நேற்று (பிப்.10) சென்னை பனகல் மாளிகை முன்பு இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உடை அணிவது அரசியல் அமைப்பால் வழங்கப்பட்ட உரிமை, மத உணர்வைத் தூண்டி மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ஜான்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நாட்டில் உள்ள பிரச்னைகளை திசை திருப்பவும், இஸ்லாமியப் பெண்களின் கல்வி உரிமையை பறிக்கவும் முயல்கின்றன.

குறிப்பாக மாணவர்களிடையே மத உணர்வைத்தூண்டி, கலவரத்தை உருவாக்க நினைக்கின்றன. கர்நாடக அரசு ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்துள்ள சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

இதையும் படிங்க: "எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம்" - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.