ETV Bharat / state

அரசு குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுவன் - டிராஃபிக் ராமசாமி  முறையீடு

author img

By

Published : Sep 27, 2019, 12:44 PM IST

traffic Ramasamy

சென்னை: பிராட்வே அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த சிறுவனின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என டிராஃபிக் ராமசாமி முறையிட்டுள்ளார்.

சென்னை, பிராட்வே சண்முகராயன் தெருவில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவரின் மகன் ஆலன்(8). இச்சிறுவன் செப்டம்பர் 25ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதாவது, சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மிகவும் பழமையான குடியிருப்புகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இப்படி பராமரிக்காமல் இருக்கும் ஆபத்தான பழைய குடியிருப்புகளை இடிக்க, மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும்; அதை அமல்படுத்தாத காரணத்தால் தான் ஆலன் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டது.

எனவே இது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறி, டிராஃபிக் ராமசாமி முறையீடு செய்தார். இதனை, ஏற்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, டிராஃபிக் ராமசாமியிடம் இந்த வழக்கை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

Intro:Body:சென்னை பிராட்வே பகுதியில் பழைய வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழப்பு, தாமாக வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என
டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடு செய்தார்.

சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான குடியிருப்புகள் நீண்டகாலமாக உள்ளன.

செப்டம்பர் 25ம் தேதி இரவு பெய்த கனமழையால் சுரேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுரேஷின் 8 வயது மகன் உயிரிழந்தான்.

இது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

பராமரிக்காமல் இருக்கும் ஆபத்தான பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும்,அதை அமல்படுத்தாத காரணத்தால் தான் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டது என டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.