ETV Bharat / state

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

author img

By

Published : Sep 26, 2019, 11:26 AM IST

Updated : Sep 26, 2019, 12:44 PM IST

சென்னை : ஏழுகிணறு  பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆலன் என்ற சிறுவன் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

8yr child death in chennai

சென்னை ஏழுகிணறு பகுதி சண்முக நாராயணன் தெருவில் சுரேஷ் குமார் - கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆலன் ( 8 ). இந்நிலையில் ஆலன் வீட்டில் தாய், சகோதரியுடன் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது பெய்த மழையால் திடீர் என வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி சிறுவன் ஆலன் மீது இடிந்து விழுந்தது. உடனே சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆலனை கொண்டு சென்றனர். ஆனால், ஆலனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

8yr child death in chennai
உயிரிழந்த சிறுவன் ஆலன்

இதில் நல்வாய்ப்பாக ஆலனின் தாய், சகோதரி உயிர் பிழைத்தனர். கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடம் என்பதால் பல நாட்களாக வீட்டினை சீரமைக்கக்கோரி முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியில் உள்ளோர் ஆதங்கத்துடன் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : சுபஸ்ரீ வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

Intro:Body:பிராட்வே பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பலி .

பிராட்வே பகுதியில் இரவு பெய்த மழை காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து தூங்கி கொண்டிருந்த ஆலன் (வயது 8 ) என்ற சிறுவன் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலே பலியானான்.

மெர்சி என்ற பெண் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.Conclusion:
Last Updated : Sep 26, 2019, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.