ETV Bharat / state

அனைத்து ஊர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக செல்ல உத்தரவு!

author img

By

Published : Feb 17, 2023, 11:59 AM IST

அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இயக்குனர், அனைத்து கிளை, உதவி மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் "நமது கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தம் தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு
அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு

போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள், இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வடபழனி, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம் செல்ல வேண்டியவர்கள் தேவையின்றி கோயம்பேடு வரை சென்றுவிட்டு மீண்டும் பேருந்து மாறி செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: நாளை தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.