ETV Bharat / state

2,774 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: தற்காலிக நியமனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி

author img

By

Published : Mar 26, 2022, 7:25 AM IST

2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி TN school education department has approved appointment of 2774 post graduate teachers on temporary contract basis
2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி TN school education department has approved appointment of 2774 post graduate teachers on temporary contract basis

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 பணியிடங்களை 5 மாதங்களுக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்பச் சிறிது காலம் ஆகும். எனவே இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன், பொதுத்தேர்வுக்குத் தயார் செய்தல், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றைக் கருதி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஏற்பாடாக நியமித்துக் கொள்ளலாம்.

மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்ய

தற்போது அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் ஐந்து மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக நியமிக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்

முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய 11 பாடங்களுக்கு மட்டுமே மாதம் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட உடன் இவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி

இதையும் படிங்க: பள்ளி மேலாண்மைக் குழு.. எதற்கு இந்த குழு.. இதன் பயன் என்ன ?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.