ETV Bharat / state

துணிவு மேக்கிங் வீடியோ வெளியீடு!

author img

By

Published : Jan 28, 2023, 10:02 PM IST

Etv Bharat
Etv Bharat

அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

துணிவு மேக்கிங் வீடியோ வெளியீடு

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‘துணிவு’. இப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

விஜய் நடித்த வாரிசு படத்துடன் வெளியான துணிவு திரைப்படம் இன்று வரை உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வங்கிகளின் மோசடி பற்றி இயக்குநர் ஹெச்.வினோத் இப்படத்தில் சொல்லியிருந்தது மக்களிடம் கவனம் பெற்றது.

மேலும், இப்படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தது. படம்‌ முழுவதும் இருந்த சண்டைக் காட்சிகள் படம் பார்த்தவர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 3வது வாரத்திலும் ஹவுஸ்புல்; வசூல் வேட்டையில் 'வாரிசு' கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.