ETV Bharat / entertainment

3வது வாரத்திலும் ஹவுஸ்புல்; வசூல் வேட்டையில் 'வாரிசு' கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Jan 28, 2023, 3:25 PM IST

Etv Bharat
Etv Bharat

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஓசூர் லட்சுமி தேவி திரையரங்கில் 17 நாட்களைத் தாண்டியும் ஹவுஸ்புல் காட்சிகளாக வாரிசு ஓடிக்கொண்டு இருக்கிறது. புதுச்சேரி பிவிஆர் திரையரங்கில் மற்ற திரைப்படங்களை விட இரு மடங்கு அதிகமான காட்சிகள் வாரிசு படத்திற்காகத் திரையிடப்பட்டு வருகின்றன.

திருச்சி மரியம் திரையரங்கில் இதுவரை விக்ரம் படத்திற்குத் தான் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை (footfall) தந்தனர் என்கிற சாதனை இருந்து வந்தது. அதை வாரிசு திரைப்படம் முறியடித்து தற்போது அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

அதேபோல திருநின்றவூர் வேலா சினிமாஸ், அறந்தாங்கி விஎஸ் திரையரங்கம் ஆகியவற்றிலும் வாரிசு படத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஈரோடு பள்ளிபாளையம் ஜெயலட்சுமி சினிமாஸ் திரையரங்கிலும் மூன்றாவது வாரத்தில் வாரிசு திரைப்படத்திற்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் இருந்து வருகிறது.

3வது வாரத்திலும் ஹவுஸ்புல்; வசூல் வேட்டையில் 'வாரிசு' கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?
3வது வாரத்திலும் ஹவுஸ்புல்; வசூல் வேட்டையில் 'வாரிசு' கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

வாரிசு திரைப்படம் படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும், வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வாரிசு படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தம்பிக்குப் போட்டியாக அண்ணன் - இது லிஸ்ட்லயே இல்லையே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.