ETV Bharat / state

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

author img

By

Published : Sep 12, 2022, 7:45 PM IST

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை
அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (செப்டம்பர் 13) காலை 10 மணியளவில், அனைத்துத்துறை செயலாளர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள், வரும் காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் விரிவான அறிவுரைகளை வழங்கவுள்ளார்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கல்லை கூட திமுக எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.