ETV Bharat / state

சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதனை சந்தித்த தெலங்கானா வேளாண் துறை அமைச்சர் !

author img

By

Published : Jul 26, 2023, 5:40 PM IST

Telangana Agri minister visits chennai
சென்னைக்கு வருகை தந்தார் தெலுங்கானா வேளாண் அமைச்சர் சிங்கி ரெட்டி

தெலங்கானா மாநில வேளாண்துறை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி சென்னையில் வேளாண் விஞ்ஞானியும், பசுமை புரட்சியின் தந்தையுமான எம்.எஸ்.சுவாமிநாதனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தெலங்கானா மாநில வேளாண் துறை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டிக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். அப்போது தெலங்கானா அரசு சார்பில் நினைவு பரிசு ஒன்றை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில், தெலங்கானாவில் மேற்கொள்ளப்படும் விவசாய கொள்கைகள், 2023-2024 நிதியாண்டில் விவசாய மானியம், அரிசி விலை, தெலங்கனா அரசின் வேளாண் ஆய்வுகள் குறித்து எம்.எஸ்.சுமாமிநாதனிடம் அமைச்சர் விளக்கினார்.

இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம்.. தப்புமா பாஜக அரசு! நடைமுறை என்ன?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி, "இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுடன் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மேலும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு மிக சிறந்த இயற்கை விஞ்ஞானி. உலகமே அவரின் வேளாண் அறிக்கை கவனித்த வண்ணம் செயல்பட்டு வருகிறது. என்றார்.

மேலும், இந்தியாவிலே வேளாண் துறை சிறந்து விளங்கும் மாநிலமாக தெலங்கானா திகழ்ந்து வருகிறது. எங்கள் மாநிலத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். விவசாயிகளுக்கு குறிப்பாக ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கிக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார்

இதையும் படிங்க: "ரூ.5,600 கோடி ஊழல்" - ஆளுநரிடம் இரும்பு பெட்டியில் 'திமுக பைல்ஸ்-2' ஆவணங்களை வழங்கிய அண்ணாமலை!

தொடர்ந்து பேசிய அவர்,"நாங்கள் அசோக் தல்வாய் குழுவிடம் பல முறை எங்களின் வேளாண் அறிக்கை கொடுத்து முயற்சி செய்தோம், ஆனால் அதை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். எங்கள் மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். மேலும், எம்.எஸ்.சுவாமிநாதனை தெலங்கானா மாநிலத்திற்கு அழைத்திருக்கிறோம்" என்றார்.

பின்னர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தெலங்கானா வேளாண் துறை அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மதுபானங்கள் உயர்வுக்கு மகளிர் உரிமைத்தொகை தான் காரணமா? மதுவிலக்கு அமைச்சர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.