ETV Bharat / state

பர்மிஷன் தராததால் கோபம் - ஊழியர் ஓட ஓட விரட்டி கொலை...!

author img

By

Published : Nov 18, 2022, 8:26 PM IST

Updated : Nov 19, 2022, 10:45 AM IST

எழும்பூரில் பட்டப்பகலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம்
எழும்பூரில் பட்டப்பகலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம்

வேலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பர்மிஷன் தராத கோபத்தில் சக ஊழியரை ஓட ஓட விரட்டி கத்தியால் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (30). இவருக்கு திருமணமாகி தேவபிரியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது விவேக், அயனாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும், எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இணைய சேவை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் பணிக்கு வந்த விவேக்-ஐ அவர் பணியாற்றும் அலுவலகத்தில் வைத்து ஒருவர் திடீரென கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க விவேக், ஓடியபோதும் விடாமல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தோஷ்
கைது செய்யப்பட்ட சந்தோஷ்

இதுகுறித்து அருகிலிருந்த பொதுமக்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், உடனடியாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கொலை செய்துவிட்டு மாடி வழியாக தப்பிக்க முயன்ற கொலையாளியை காவல் துறையினர் மாடிக்குச சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் பட்டப்பகலில் தனியார் ஊழியர் வெட்டிக் கொலை

சந்தோஷ் நான்கு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தோஷ் சீக்கிரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என விவேக்கிடம் தெரிவித்த போது, பணி முடிக்காமல் வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என சந்தோஷை, விவேக் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதை மனதில் வைத்துக்கொண்ட சந்தோஷ் வழக்கம் போல பணிக்கு வந்த விவேக்கிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ் தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, விவேக்கின் கழுத்தில் குத்திவிட்டு, ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். மேலும் சந்தோஷ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைக்கு அடிமையாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன் விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற அடிப்படையில் எழும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை சம்பவத்தை சந்தோஷ் மட்டும் நிகழ்த்தியுள்ளாரா அல்லது வேறு நபர்கள் உதவி செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடமான எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவன அலுவலக வளாகத்தில் கொலை செய்யப்பட்ட விவேக்கின் மனைவி, சகோதரிகள் மற்றும் குடும்பத்தார் கூடி கதறி அழுது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, கூச்சலிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பிரியா மரண விவகாரம்: கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை

Last Updated :Nov 19, 2022, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.