ETV Bharat / state

’கரோனாவை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள்தனம்’ - ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Apr 6, 2022, 10:09 PM IST

’கரோனாவை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள்தனம்..!’ - ராதாகிருஷ்ணன்
’கரோனாவை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள்தனம்..!’ - ராதாகிருஷ்ணன்

கரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் மிகக் குறைவாகவும், சில மாவட்டங்களில் பூஜ்யமாகவும் இருந்தாலும், அதன் பாதையை தினசரி கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "கரோனா தொற்று ஒரு நாளைக்கு 20 என்ற நிலையை எட்டிய பின்னர், மெதுவாக எண்ணிக்கைகள் மேல்நோக்கி உயரும் போக்கைக் காட்டத் தொடங்கியுள்ளன. ஆனாலும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டில் உள்ளது.

கரோனாவிற்கு எதிராக போர்: கரோனா தொற்று இல்லாத முழுமையான இலக்கை அடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. ஆனாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஒற்றை எண்ணிக்கையிலும், திருப்பூர், சேலம் மற்றும் ஓரிரு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்பது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் , முகக்கவசம், தகுந்த இடவெளி போன்ற உத்தரவுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. கரோனா தொற்று இருந்து கொண்டுதான் இருக்கிறது. முகக்கவசம், கை கழுவுதல், தகுந்த இடைவெளி ஆகிவற்றையும், காற்றோட்டமான பகுதியில் இருப்பதையும் உறுதி செய்வதுடன், நெரிசலான இடம், காற்றோட்டம் இல்லாமல் மூடப்பட்ட இடங்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஆகியவற்றில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், தென்கிழக்கு ஆசியா, சீனா போன்ற நாடுகளில் இன்றும் உலகில் ஒரு நாளைக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் கரோனா பாதிப்பு பதிவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். கோவிட்-க்கு எதிரான போரில் வெற்றி கிடைத்துவிட்டதாக நம்பினால் அது முட்டாள் தனமானது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசிகளில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழ்நாட்டில் பீதி அடையத் தேவையில்லை என்றாலும், மாவட்டங்களில் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், தகுதியான நபர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், இதுவரை நடைமுறையில் உள்ளதைப் போலவே பின்பற்றப்பட வேண்டும். தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் மிகக் குறைவாகவும், சில மாவட்டங்களில் பூஜ்யமாகவும் இருந்தாலும், அதன் பாதையை தினசரி கண்காணிக்க வேண்டும்.

தகுதியுடைய அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பொது சுகாதார இயக்குநரகத்துடன் கலந்தாலோசித்து, அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி, முழு மரபணு வரிசைமுறைக்காக மாதிரிகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'தாலிக்குத் தங்கம் திட்டத்தைக் கைவிடக்கூடாது' - கூட்டணியில் இருந்து திமுகவிற்கு எதிராக ஒலித்த கலக குரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.