ETV Bharat / state

ஆசிரியர் தகுதி சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு

author img

By

Published : Aug 24, 2021, 6:06 PM IST

tamilnadu government statement about tet certificate  tamilnadu government  tamilnadu government statement  tet certificate  tet  chennai news  chennai latest news  tet certificate validity  tamilnadu government statement about tet certificate validity  ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்  தமிழ்நாடு அரசு அறிவிப்பு  ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு  ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வாழ்நாள் முழுமைக்கும் செல்லும்  ஆசிரியர் தகுதித் தேர்வு  சென்னை செய்திகள்
tet certificate

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுமைக்கும் செல்லும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுமைக்கும் செல்லும் எனவும், இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் இலவச குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண் 181ன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும், சுயநிதிப் பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் நீடிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வுகளை நடத்தும் முகமையாக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012, 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ள பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லத்தக்க காலம் 7 ஆண்டுகள் என தற்போது நடைமுறையில் உள்ளது. 7 ஆண்டுகள் முடிவடைந்தப் பின்னர், அந்த சான்றிதழில் செல்லத்தக்க காலத்திகளை நீட்டிப்பு செய்யக்கோரி பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது .

இந்நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் செல்லத்தக்க காலத்தினை வாழ் நாள் முழுமைக்கும் நீட்டித்தது. இதே நடைமுறையினை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றலாம்” என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.