ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Nov 15, 2021, 9:04 PM IST

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 802 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவ.15) புதிதாக 802 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது எனவும், 918 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 764 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 800 நபர்களுக்கும், அமெரிக்கா மற்றும் துபாயில் இருந்து வந்த இருவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 கோடியே 18 லட்சத்து 18 ஆயிரத்து 972 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 லட்சத்து 15 ஆயிரத்து 632 நபர்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 69 ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் என 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து வருகின்றன. பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதே அளவில் பதிவாகிவருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 1,255 பேரும், கோயம்புத்தூரில் 1,175 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: VIRAL VIDEO: ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் ஸ்கூட்டி ஓட்டியவர் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.