ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா

author img

By

Published : Feb 15, 2022, 6:54 AM IST

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நேற்று (பிப்ரவரி 14) ஒரே நாளில் 1,634 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் (பிப்.13) ஒரே நாளில் 2 ஆயிரத்து 296 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேலும் நேற்று (பிப். 14) புதிதாக 1,634 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்ததால் சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 1,634 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,634 பேருக்கு கரோனா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 932 என உயர்ந்துள்ளது.

மேலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 64 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 341 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 305 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 116 நபர்களுக்கும், ஈரோட்டில் 98 நபர்களுக்கும், திருப்பூரில் 93 நபர்களுக்கும், சேலத்தில் 86 நபர்களுக்கும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த அளவாக தேனி, பெரம்பலூரில் இரண்டு நபர்களுக்கும், திருப்பத்தூரில் மூன்று நபர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘அரபிக் குத்து’ லிரிக்கல் வீடியோ - உற்சாகத்தில் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.