ETV Bharat / state

ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளை போலவே என் முடிவுகளும் இருக்கும் - அண்ணாமலை

author img

By

Published : Mar 7, 2023, 4:54 PM IST

Updated : Mar 7, 2023, 5:37 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போலத் தான் எனது முடிவுகளும் இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே போவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 7) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நன்றாக தூங்க விடுங்கள். சரியாக தூங்காததால் அவர் பிதற்றல்களை பேசுகிறார். நன்றாக தூங்கினால் தெளிவாக பேச முடியும். ஒய்வு இல்லாமல் உள்ளார். தமிழ்நாடு அரசியலில் சாதிகளை கலந்த ஒரே கட்சி திமுக தான். பிரிவினையை கொண்டு வந்த பெருமையும் திமுகவிற்கு தான் உண்டு.

இந்தியாவில் வடக்கு, தெற்கு போல, தமிழ்நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, கொங்கு என்று கொண்டு வந்தது திமுக தலைவர். கமல் ஹாசன் நடித்த படத்தில் எதை பார்த்தாலும் பயம் என்பது போல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருந்தால் நான் என்ன செய்ய முடியும். திமுக நடத்திய கூட்டத்தில் தேசிய அரசியல் இருந்திருந்தால், கே.சி.ஆர்., மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால் வந்து இருக்க வேண்டும்.

சினிமாவில் ஹீரோ பின்னால் 2ஆம் தர ஹீரோக்கள் பேசுவது போல் இருந்தது அந்த கூட்டம். இதை பார்த்து பாஜக பயப்பட போகிறதா. மோடி ஆட்சியில் யாரை பார்த்தும் பயம் இல்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் காலத்தில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்து இருந்தார்கள். குழந்தைகளை அழைத்து வந்து பேசுவது தமிழ்நாட்டு மக்களை அசிங்கப்படுத்துவதாக உள்ளது. முல்லை-பெரியாறு அணை விவகாரத்தில் 2 மாநில முதலமைச்சர்களும் மக்களை ஏமாற்று கின்றனர்.

2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும் இணைந்து சதி திட்டம் திட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. இவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றியோ கேரளாவை பற்றியோ கவலை கிடையாது. இந்திய அரசியலில் எம்பிக்கள் கிடைத்தால் டெல்லி சென்று பேரம் பேசலாம் என்பதற்காக இணைந்து உள்ளனர். அதுப்போல் தான் வைகோவும். கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும்.

அடுத்த தலைவர்கள் உருவார்கள். திராவிட கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இருப்பார்கள். பாஜகவில் இருந்து சேர்த்து தான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் எனது முடிவுகளும் இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே போவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான். பாஜகவில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவும் எடுப்பேன். வரும் காலத்தில் வேகம் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை. திட்டி விட்டு விவசாயம் செய்யாமல், வேறு கட்சிக்கு போய் வாழ்க என்று கோஷம் தானே போடுகிறீர்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வட மாநிலத்தினருக்கு எதிராக திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை" - அமைச்சர் துரைமுருகன்

Last Updated :Mar 7, 2023, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.