ETV Bharat / state

சூர்யா - பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

author img

By

Published : Mar 28, 2022, 3:43 PM IST

சூர்யா - பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
சூர்யா - பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் பாலா இயக்கும் சூர்யாவின் 41வது திரைப்படத்தின் பட்ப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் ஆரம்ப காலத்தில் இயக்குநர் பாலா இயக்கிய 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனிக்கப்பட்டார்.இந்த இருவர் கூட்டணி தமிழ் திரையுலகில் வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது வழிகாட்டி பாலா அண்ணா ஆக்‌ஷன் சொல்வதற்காக 18 ஆண்டுகளாக காத்திருந்தேன். இன்று இது நிறைவேறியுள்ளது. இந்த தருணம் உங்களுடைய வாழ்த்துக்கள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா - பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
சூர்யா - பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
இசை- ஜி வி பிரகாஷ்
இசை- ஜி வி பிரகாஷ்

சூர்யாவின் 41வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படக்குழுவினர் குறித்த மற்ற விவரங்களை விரைவில் வெளியாகிறது.

இதையும் படிங்க:தொகுப்பாளருக்கு பளார்... வில் ஸ்மித் ஆஸ்கர் பறிக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.