ETV Bharat / state

மருந்து வாங்கச் சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர்!

author img

By

Published : Jun 22, 2020, 5:28 PM IST

Updated : Jun 22, 2020, 5:55 PM IST

Case filed  போக்குவரத்து உதவி ஆய்வாளர்  மருந்து வாங்கச் சென்ற வாகனம் பறிமுதல்  Sub Inspector Case Filled Medical vehicle  Corona Medical Emergency  சென்னையில் மருந்து வாங்கச் சென்ற வாகனம் பறிமுதல்  Sub Inspector Case Filled Corona Medical Vehicle In chennai
Sub Inspector Case Filled

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆய்வாளருக்கு மருந்து வாங்கச் சென்ற ஓட்டுநரின் வாகனத்தை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார். இந்நிலையில், ஆய்வாளரை சித்த மருந்துகளை உட்கொள்ள கோரி மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதனால், அம்பத்தூரில் உள்ள ஆய்வாளரின் ஓட்டுநரான ராஜேஷிடம் அரும்பாக்கம் சித்தா மருத்துவமனையில் மருந்துகளை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, இன்று காலை ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தில் மருந்துகளை வாங்க பாடி வழியாகச் சென்றுள்ளார்.

அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் நாதமணி, ராஜேஷை மடக்கிப் பிடித்து வாகனத்தில் செல்வதற்கான காரணம் பற்றி கேட்டபோது மருந்து வாங்க செல்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நாதமணியிடம் காண்பித்துள்ளார்.

ஆனால், ஊரடங்கை மீறியதாகக் கூறி போக்குவரத்து காவல் துறையினர் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து அவரது வாகனத்தைப் பறிமுதல்செய்து அபராத ரசீதை வழங்கியுள்ளனர். குறிப்பாக மருத்துவச் சேவைகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்வது தொடர்பாகப் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காவல் துறையில் வேலை... ரூ.30 லட்சம் மோசடி: இருவர் கைது!

Last Updated :Jun 22, 2020, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.