ETV Bharat / state

சாலைகளில் முடங்கிக் கிடக்கும் சென்னையின் அடையாளம்.. சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை.. மெட்ராஸ் டே சிறப்பு தொகுப்பு!

author img

By

Published : Aug 21, 2023, 5:57 PM IST

Etv Bharat
Etv Bharat

Madras Day 2023: "ஒரு காலத்துல 'ரிக்‌ஷா' தான் சென்னையிலே பெரிய தொழில். ஆனால், இப்போ.." இது ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநரின் புலம்பல் வார்த்தை.. 1980 முதல் 1990-களில் பரப்பரப்புடன் இயங்கிய சைக்கிள் ரிக்‌ஷாக்கள் தற்போது, சாலையில் முடங்கிக் கிடப்பது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு..

சென்னை: சென்னை தினத்தில், சென்னையின் வரலாற்றைப் பற்றி பேசுகிறோம். சென்னையின் மரபு குறித்து கொண்டாடுகிறோம். ஒவ்வொறு சென்னை தினத்திலும், ஏதாவது, பழமையை குறித்து நாம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையே மாஸ் காட்டிக்கொண்டிருந்த சைக்கிள் ரிக்‌ஷாவின் கதையை நாம் மறந்து போகிறோம்.

மெட்ராஸில் இருந்து, 'சென்னை' என்று பெயர் மாற்றப்பட்ட காலத்தில் இருந்து சென்னை பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை சிங்கார சென்னையாக பிறப்பெடுத்து, அடுத்தடுத்து வளர்ச்சிகளுக்கு சென்னை நகரம் சென்றது. வளர்ச்சியில், போக்குவரத்து மாற்றத்தை கூட அது அதிகமாக சென்னை நகரம் தன்னை புதுப்பித்துக் கொண்டது. மாட்டு வண்டி, ஜட்கா வண்டி, கை ரிக்‌ஷா, சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, டாக்ஸி, புறநகர் ரயில், மாடி பஸ், பேருந்து, மெட்ரோ ரயில் வரை சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை சென்னை நகரம் கடந்த 70 ஆண்டு காலத்தில் மாற்றத்தை சந்தித்து வருகிறது.

ஆனால், சைக்கிள் ரிக்‌ஷாவிற்கு இருந்த பிரபலம் வேறு எந்த ஒரு போக்குவரத்துக்கும் இல்லை என்று கூறலாம். சென்னையில் தற்போது மிக அரிதாகவே காணப்படும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள், 40 ஆண்டுகளுக்கு முன்னர் எளிய சாமனிய மக்கள் அதிகளவு பயன்படுத்திய போக்குவரத்து முறை என்று தான் கூற முடியும். தற்போது சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே ரிக்‌ஷாக்கள் சாலையோரங்களில் சென்னையின் போக்குவரத்து வரலாற்றின் மிஞ்சியுள்ள எச்சமாக இருப்பது மிகவும் வருத்தம் அடையக்கூடிய விஷயமாக உள்ளது.

குறிப்பாக சென்னையின் வரலாறு தொடங்கும் இடமான பிராட்வே, சவுகார்பேட்டை, வால் டாக்ஸ் சாலை, கருப்பர் நகரம், கொத்தவால்சாவுடி, பூக்கடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளாகும். அனுபவங்கள் தாங்கிய பலவீனமான உடலை வைத்துக் கொண்டு, சைக்கிள் ரிக்‌ஷா, மணியை அடித்துக் கொண்டு, எம்.ஜி.ஆர் பாடலை முணுமுணுத்துக் கொண்டே முதியவர்கள் பலரும் பழுதடைந்த ரிஷாக்களில் வாடிக்கையாளர்களையும், குடோன் தெருவில், அதிக அளவில் பார்சல்களை சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. நவீன போக்குவரத்துக்கு மக்கள் மாறி வந்தாலும், சில சவுகார்பேட்டை, மன்னடியில் வாழும் வட இந்தியர்களால் ரிக்‌ஷா தொழில் பிழைத்துக் கொண்டு வருகிறது.

சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட கை ரிக்‌ஷாக்கள் தான் போக்குவரத்தாக இருந்தது. ஒருவரை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து, அதை ஒரு நபர் இழத்து செல்லும் காட்சி மாற வேண்டும் எனக் கூறி கடந்த 1973ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி கை ரிக்‌ஷாவை ஒழித்தார். அதைத்தொடர்ந்து, அனைவருக்கும் அதற்கான இழப்பீடும் வழங்கி, புதிதாக சைக்கிள் ரிக்‌ஷாவை வழங்கினார். அந்த ரிக்‌ஷாதான் சென்னையில், ஒடிக்கொண்டோ, இல்லை ஏதாவது சாலையில், நின்றுக் கொண்டோ இருந்து வருகிறது.

தற்போதும், காலையில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில், ஆட்டோவிற்கும், கால் டாக்ஸிக்கும், இடைய சைக்கிள் ரிக்‌ஷாவும் சவாரிக்காக காத்துக் கொண்டிருக்கும். அப்படி காத்திருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர் கோவிந்தன் என்பவரிடம் பேச்சுக்கொடுத்தபோது "காலையில் இருந்து சவாரிக்கு காத்துக்கொண்டிருக்கிறேன் வருபவர் எல்லாம் ஆட்டோ, பைக் டாக்ஸி என்று சென்று விடுவார்கள். வயதனாவர்கள், பக்கத்தில் வீடு உள்ளவர்கள் தான் என ஒருநாளைக்கு ஒரு சாவாரி வரும். அதுவும், அதில் ரூ.50 முதல் ரூ.100 வரை கிடைக்கும். காலை 11.00 மணிக்கு மேல், அம்மா உணவகத்தில், மதியம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, கொத்தவால்சாவுடி, பூக்கடை, குடோன் தெரு, பர்மா பஜார், பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, இங்கு எல்லாம் சென்றால், பார்சல்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்வேன்.

அதில், எனக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை தான் கிடைக்கும். 30 வருடங்களுக்கு முன்னால், இதே வருமானம் தான் கிடைக்கும். ஆனால், அந்த வருமானம் பெரியதாக இருந்தது. அவன் ரிக்‌ஷா ஓட்டுறான். தினமும், ரூ.100-லிருந்து ரூ.200 சம்பாதிக்கிறான் என்று சொல்லிதான் பெண் கொடுத்தார்கள்.

இன்றும் அதே வருமானம்தான், அன்றைக்கு இருந்த விலைவாசிக்கு அந்த வருமானம் பெரிய வருமானம். ஆனால் இப்போது, இருக்கும் விலைவாசிக்கு இந்த வருமானம் சுத்தமாக இல்லை. எங்களுக்கு வேறு தொழிலும் தெரியாது, அப்படியே சென்றாலும், சில பிரச்னைகள் இருந்து வருகிறது. அதிகமாக வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வருவதனால், எங்களையும் வேலைக்கு எடுப்பது இல்லை.

மேலும், எங்களுக்கு என்று ஓட்டுநர் உரிமம் கூட இப்போதும் இல்லை. பல முறை பதிவு செய்து பார்த்தும், இன்று வரை கிடைக்கவில்லை, தமிழக அரசு எல்லாருக்கும் எல்லாம் செய்து வருகிறது. ஆனால், சைக்கிள் ரிக்‌ஷா ஒட்டுநர்களை தமிழக அரசு மறந்து விட்டது. எங்களுக்கு மோட்டார் வைத்த சைக்கிள் ரிக்‌ஷா தருவதாக பல வருடங்களுக்கும் முன் சொன்னார்கள். ஆனால், அது இப்போதுதான் எனக்கே ஞாபகம் வருது" என்று வேதனை நிறைந்த வார்த்தைகளால் பேசினார்.

அதைத்தொடர்ந்து, மன்னடியில், எம்.ஜி.ஆர்.பாடலை பாடிக்கொண்டு சாலையில் சைக்கிள் ரிக்‌ஷாவை தள்ளிக் கொண்டு வந்த விநாயகம் என்பவரிடம், கேட்டப்போது, "சைக்கிள் ரிக்‌ஷா தொழில், மிகவும் பழமையான தொழில். நான் 30 வருடத்திற்கு மேல், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன். 40 ஆண்டுகளுக்கு முன்பாக, காலையில் சென்னை சென்டரல் ரயில் நிலையம் முழுவதும் சைக்கிள் ரிக்‌ஷாதான் நிற்கும். சவாரி தேடிவரும், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சவாரிகள் வரும். குறைந்தது, ஒரு நாளைக்கு 10 சவாரி வரை வரும். பள்ளிக்கூடம் விடுமுறை நாட்களில், எல்லாம் எங்களுக்கு மெரினா பீச் சவாரிக்கு நின்றுக்கொண்டிருப்போம்.

ஆனால், இப்போது சவாரியே இல்லாமல், எங்கள் தொழில் சரிந்துவிட்டது. எம்.ஜி.ஆர். நடித்த 'ரிக்ஷாக்காரன் படம்' எங்களுக்காவே எடுத்தது போல் இருந்தாக எண்ணி வருகிறோம். அதன் தாக்கம்தான் இன்றுவரை சைக்கிள் ரிக்‌ஷாவில் எம்.ஜி.ஆர். படம் இருக்கும். இப்போது பலப்பேர் பல தொழிலுக்கு மாறிவிட்டார்கள் ஏன்? அந்த காலத்தில் சைக்கிள் ரிக்‌ஷா பந்தயம் நடக்கும், நான் அதில் பங்கேற்று ஜெயித்து இருக்கிறேன். அதேப்போல், இங்கு இருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஒட்டுநர்கள் சார்பேட்டாவிற்கும், இடியாப்பநாயக்கர் பரம்பரைக்கும், எல்லப்ப செட்டியார் பரம்பரைக்கும் பாக்ஸிங்க் செய்த சில வீரர்களெல்லாம் சைக்கிள் ரிக்‌ஷா ஒட்டுநர்களாக தான் இருந்தார்கள். இப்போது எல்லாம், வாடிக்கையான சவாரிகள் தான் எங்களுக்கு உதவியாக இருக்கிறது என்று கூறினார்."

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை தினம்(Madras Day) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் சென்னைக்கு என்று ஒரு தனித்துவமான நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் போக்குவரத்து வளர்ச்சிக்கு உதவியாக இருந்த, சைக்கிள் ரிக்‌ஷாவிற்கும் தனி வரலாறு உண்டு. ஆனால், இவர்கள் சென்னையில் தற்போதும் ஒரு ஓரமாக சவாரிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையும், சைக்கிள் ரிக்‌ஷா பயணம் விரும்பும் சிலரால் தான் இவர்களின் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம் 117வது பிறந்த நாள்.. அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.