ETV Bharat / state

பாலியல் தொழிலுக்கு பள்ளி மாணவிகள்.. விசாரணையில் திடுக் தகவல்கள்.. சென்னை அதிர்ச்சி! - chennai schoolgirls prostitution

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 1:03 PM IST

schoolgirls in prostitution at Chennai: சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபத்திய மாணவியின் தாய் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வழக்கில் கைதான நதியா, அவரது உறவினர் ராமச்சந்திரன்
பாலியல் வழக்கில் கைதான நதியா, அவரது உறவினர் ராமச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட நதியா மற்றும் அவரது உறவினர் ராமச்சந்திரன், சுமதி, மாயா ஒலி, ஜெயஸ்ரீ, அசோக் குமார், ராமச்சந்திரன் மற்றும் 17, 18 வயதில் இரு பெண்கள் என 9 பேர் பிடிபட்டனர்.

மகள்தான் தூண்டில்: இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நதியா 12வது படிக்கும் தனது மகள் மூலமாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து 17 வயதேயான அந்த மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இது மட்டுமல்லாமல், நதியா 17 வயதேயான மாணவிகளை வயதானவர்கள் பலருடன் பாலியல் உறவுக்கு உட்படுத்தியது அம்பலமானது.

மேலும், இதற்காக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும், மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நதியாவிற்கு அவரது உறவினரான ராமச்சந்திரன் என்பவர் உதவி செய்துவந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வயசானவர்களுக்கும்: இந்த நிலையில், கடந்த ஓராண்டாக நதியா தனது மகள் மூலமாக ஏராளமான மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர் மாணவிகளை விமானத்தில் ஹைதராபாத்திற்கும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கும் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இதுமட்டுமன்றி, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அடிக்கடி சென்னை வந்து பள்ளி மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்று அவர்களோடு பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல, சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவரும் பள்ளி மாணவிகள் பலருடன் அடிக்கடி பாலியல் உறவு வைத்திருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

பாய்ந்தது போக்சோ: இதனைத் தொடர்ந்து, பாலியல் வழக்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நதியா உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீசார், மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பால்வாடியில் பார் செட்டப்.. ரங்கன் சேட்டன் சீன் போட்ட திமுக பிரமுகர் மகன் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.