ETV Bharat / state

தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து..! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 5:20 PM IST

southern railway announced trains to delhi in january and february have been cancelled due to maintenance work
தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து

Delhi Express trains Cancelled: வடக்கு ரயில்வேவில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக வருகின்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: வடக்கு ரயில்வேவில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக வருகின்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களைப் பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களிலிருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் விரைவுவண்டி (12641) ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்களும், மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவுவண்டி (12651) ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவுவண்டி (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியிலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா விரைவுவண்டி (16787) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் விரைவுவண்டி (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை விரைவுவண்டி (12652) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரிலிருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை விரைவுவண்டி (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி விரைவுவண்டி (16788) ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.