ETV Bharat / state

மிக விரைவில் 709 புதிய மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 16, 2022, 9:59 PM IST

Updated : Aug 16, 2022, 10:38 PM IST

மிக விரைவில் 709 புதிய மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது...அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மிக விரைவில் 709 புதிய மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது...அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மிக விரைவில் தமிழ்நாட்டில் 709 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டம் மழைக்கால நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற எப்படி உருவாகிறது, அதனை தடுப்பது எப்படி, மக்களுக்கு இந்நோய்கள் குறித்து மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல அறிவுரைகள் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 45 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயலாற்றிய திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, இராமநாதபுரம் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினார். மேலும் விரிவான காப்பீடு திட்டத்தை செயல்படுத்த உதவியாக இருந்த யுனைடெட் இந்தியா, விடால் ஹெல்த், மெடி ஆசிஸ்ட் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும்யும் கௌரவித்து பாராட்டு சான்றிதழைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 95.96 % முதல் தவணை தடுப்பூசியும், 89.44 % பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா டைபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் 2017யில் தான் அதிகபடியானவர்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கரோனாவால் மே மாதம் மட்டும் 10,136 பேர் தமிழ்நாட்டில் மரணம் அடைந்துள்ளனர். 85 லட்சமாவது பாயானளி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் விரைவில் பயன்பெற இருக்கிறார், 1.5 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையம், 25 நகர்ப்புற சுகாதார நிலையம் என மொத்தமாக 50 சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன, அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட இருக்கிறார். தமிழ்நாட்டில் 709 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று 60க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. மிக விரைவில் தமிழ்நாட்டில் 709 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை மக்களால் நினைத்தால் 100% தடுக்க முடியும். கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளை 365 நாட்களும் செயல்படவில்லை என்றாலும் கூட மழைக்காலங்களில் இது போன்ற பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, வெப்ப சாலனத்தால் ஏற்படக்கூடிய மழை என அனைத்துமே சிறப்பாக பெய்து கொண்டிருக்கிறது. 2017 யில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பை போன்ற இனி எப்போதும் டெங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது, 2017 யில் தான் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட கரும்புள்ளி என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்: கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது, மருத்துவத்துறை கரோனா நெருக்கடி காலகட்டத்திலும் தீவிரமாக பணி செய்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அவர்களுக்கு எங்களது பாராட்டுக்கள். அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் நோயை தடுக்க முடியும் என்பதை கரோனா காலகட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது. தற்பொழுது மழைக்கால நோய்களுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மழைக்கால நோய், டெங்கு போன்றவை குறித்து அதிகாரிகள் மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இறுதியாக பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு: இல்லத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மக்கள் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களோ, அதே போல நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நாங்கள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கிறீர்களோ அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து நாங்கள் அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் வேலையை குறைக்க நகர்ப்புற வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சி துறையும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மலைப்பாதையில் சாலை வசதி இல்லாததால் பிறந்த இரட்டைக்குழந்தைகள் உயிரிழப்பு

Last Updated :Aug 16, 2022, 10:38 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.