ETV Bharat / state

மூன்று மாதங்களில் ரூ.23 கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு

author img

By

Published : Sep 6, 2021, 1:03 PM IST

வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு
வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு

திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் ரூ. 23 கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் உரிமை ஆவண விவரங்களை இணையதளத்தில் வெளியிடவேண்டும், அது தமிழில் வெளியிடவேண்டும். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் மாவட்ட வக்பு ஆய்வாளர், கண்காணிப்பாளர் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதில் பல்வேறு தவறுகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் இன்று (செப்.6) கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 53 ஆயிரத்து 478 வக்பு சொத்துகள் அனைத்தும் இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையோடு, உரிமை ஆவண விவரங்களோடு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அது ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழில் மாற்றி பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை ரூ. 23 கோடி சொத்துக்கள் மீட்பு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடத்த தவறுகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் சென்னை நந்தனத்தில் உள்ள வாரியத்திற்கு சொந்தமான ரூ. 7 கோடி மதிப்பிலான 2,700 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல திருவல்லிக்கேணியில் 2,500 சதுர அடியில் உள்ள ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 ஆயிரத்து 750 சதுர அடி நிலம் என மொத்தம் 23 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீட்க சிறப்பு குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.