1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

author img

By

Published : Sep 6, 2021, 6:35 AM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "9 முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறன. முதல் எட்டு நாள்கள் வகுப்புகள் எப்படி செல்கிறது, வருகை பதிவேடு எப்படி இருக்கிறது, மாணவர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து கண்காணித்து வருகிறோம்.

தொடக்கப்பள்ளி என்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். தூய்மைப் பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் அவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 3.30வரை செயல்படும். மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டு இயக்குகின்றனர். அவ்வாறு செய்வதில் தவறில்லை. மாணவர்கள் தாமதமாக வந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க கூடாது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தேசிய கல்வி கொள்கையில் உடன்பாடு இல்லாதவற்றை ஒன்றிய அரசிடம் தெரிவித்துள்ளோம். அந்த கல்வி கொள்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையானதை எடுத்து கொள்கிறோம். நகர்புற மாணவர்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் தற்போது ஆங்கிலம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

ஒரே தொகுதியில் அதிகமான ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றியிருந்தால் அவர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன" என்றார்.

இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்குப் பின் முதலமைச்சர் படம் இல்லாத ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.