ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்

author img

By

Published : Mar 1, 2022, 11:56 AM IST

Updated : Mar 1, 2022, 12:25 PM IST

அன்று ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து இன்று பலித்தது, அன்று ஸ்டாலினுக்கு ரஜினி சொன்ன வாழ்த்து இன்று பலித்தது ,  நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து  Rajinikanth BIRTHDAY wishes for CM Stalin
அன்று ஸ்டாலினுக்கு ரஜினி சொன்ன வாழ்த்து இன்று பலித்தது , நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து Rajinikanth BIRTHDAY wishes for CM Stalin

இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்ற பின் கொண்டாடும் முதல் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இல்லம், கோபாலபுரம் கலைஞர் இல்லம், திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்தநாளை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

  • இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

    — Rajinikanth (@rajinikanth) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் " எனப் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth BIRTHDAY wishes for CM Stalin
Rajinikanth BIRTHDAY wishes for CM Stalin

அதோபோல மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மனதிற்குகந்த நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உயர்ந்த கொள்கைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட வேண்டும்; கேரள முதலமைச்சர்

Last Updated :Mar 1, 2022, 12:25 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.