ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Sep 12, 2021, 1:47 PM IST

மழை
மழை

தென்மேற்குப் பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (செப்.12) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்.13, 14: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை
மழை

செப்.15: நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.16: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழை
மழை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்: இன்று முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை
மழை

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

வால்பாறை (கோவை) 9, பந்தலூர் (நீலகிரி) 6, சின்கோனா (கோவை) 5, சோலையாறு (கோவை), தேவலா (நீலகிரி) தலா 4, பெரியாறு (தேனி), நடுவட்டம் (நீலகிரி) தலா 3, எடப்பாடி (சேலம்), அவலாஞ்சி (நீலகிரி), தலா 2, சேலம், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 1.

இதையும் படிங்க: முன்னுரிமை ஒதுக்கீட்டின் படி நீட் தேர்வெழுதும் 8,727 அரசுப் பள்ளி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.