ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்; 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

author img

By

Published : Jul 27, 2023, 5:21 PM IST

Etv Bharat
Etv Bharat

Kalakshetra sexual harassment case: சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் புகார் வழக்கு தொடர்பாக, 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சென்னை: கடந்த மார்ச் மாதம் அடையாறு கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஹரிபத்மன் என்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ஹரிபத்மன் மட்டுமல்லாது மேலும் சில ஊழியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

162 மாணவிகள் புகார்: இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அவ்வாறு விசாரணை நடத்தியபோது, நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். புகார்கள் அளிப்பதற்காக இ-மெயில் முகவரியும் மாநில மகளிர் ஆணையம் கொடுத்திருந்தது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல் துறைக்கு பரிந்துரை செய்தது.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மூலம் மோசடி: மேற்கு வங்க பெண்ணை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார்!

ஜாமீனில் வெளிவந்த ஹரிபத்மன்: இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்துள்ளனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 6ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஹரி பத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டவிரோத பணப் பரிமாற்றம்: PFI-ஐ சேர்ந்த 2 நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்: இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை முடிந்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் சந்தோஷ் முன்னிலையில் சமர்பித்தனர்.

அதன் பிறகு பேராசிரியர் ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இருதரப்பிலும் வாதங்கள் நடைபெற்று, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு அவை பதிவு செய்யப்படும். பின்னர், குற்றப்பத்திரிக்கையில் சாட்சி ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை குறுக்கு விசாரணை செய்து இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு இறுதி வாதம் நடைபெறும் எனவும் அதன் பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Kalakshetra: கலாக்ஷேத்ரா பாலியல் விவகாரம்: ஓரிரு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.