ETV Bharat / state

ராமதாஸ் நில அபகரிப்பு விவகரம்: ஸ்டாலின் மீது பாமக புகார்!

author img

By

Published : Apr 5, 2019, 8:46 PM IST

பாமக வழக்கழிஞர் பாலு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சமூகத்தினரின் சொத்துக்களை அபகரித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாமக புகார் அளித்துள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை தனது குடும்பத்தினர் பெயருக்கு ராமதாஸ் பெயர்மாற்றம் செய்துள்ளார் என்று ஸ்டாலின் அரக்கோணம் பரப்புரையில் பேசியது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதால், அவர் பேசியது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது” என்றார்.

பாமக வழக்கறிஞர் பாலு

மேலும், அந்த கோரிக்கைக்கு இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்காததால், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தேர்தல் பரப்புரையில் முன்வைத்த ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி சார்பாக நான் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவைக் கொடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.04.19

வன்னியர் அறக்கடளைக்கு சொந்தமான சொத்துக்களை தனது குடும்பத்தினர் பெயருக்கு ராமதாஸ் பெயர் மாற்றம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரி அன்புமணி புகார்...

பாமகவின் வழக்கறிஞர் பாலு தலைமை செயலகத்தில் பேட்டியளித்தார் அப்போது, 
வன்னியர் அறக்கடளைக்கு சொந்தமான சொத்துக்களை தனது குடும்பத்தினர் பெயருக்கு ராமதாஸ் பெயர் மாற்றம் செய்துள்ளார் என்று ஸ்டாலின் அரக்கோணம் பரப்புரையில் பேசியது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதால், அவர் பேசியது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்காததால், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறிய ஸ்டாலின் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை கொடுத்துள்ளார். அவர் சார்பாக அந்த மனு ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த புகார் தொடர்பாக ஸ்டாலினிடம் விளக்கம் கேட்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்..

மேலும், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் கையில் மதுக்கோப்பையுடன் இருந்ததாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட திமுக மீது நடவடிக்கை கோரி கொடுக்கப்பட்ட மனு ஏற்கப்பட்டு தயாநிதி மாறன் மீதும் அப்படத்தை உருவாக்கிய மற்றொரு திமுக பிரமுகர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.