ETV Bharat / state

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு - வைத்திலிங்கம்

author img

By

Published : Feb 4, 2023, 8:53 PM IST

Etv Bharat
Etv Bharat

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கே ஆதரவு அளிக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு - வைத்திலிங்கம்

சென்னை: உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி இரட்டை இலை சின்னத்தில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக இருந்தாலும் ஆதரவு கொடுப்போம் என ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (பிப்.4) நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமசந்திரன், "அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையராக கருதப்படுவார். அவர் பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எங்களை தரப்பையும் பொதுக்குழுவில் அனுமதிக்க கோரி, உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இது எங்கள் தரப்பை நீக்கியது செல்லாது என்பதற்கான உத்தரவாக பார்க்கிறோம்.

அண்ணாமலை எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறக் கூறிய கருத்துக்கு நாங்கள் பதில் கூற விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் இடைக்காலமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் அடி எடுத்து வைக்கின்றோம். நாங்கள் வைத்த பெரும்பாலன கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதால் நாங்கள் தீர்ப்பை மதித்து ஆதரவு அளிக்கிறோம்" எனக் கூறினார்.

இரட்டை இலைக்கே ஆதரவு: இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், "அண்ணா திமுக சார்பில் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிடுபவருக்கு ஆதரவு தெரிவிப்போம். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, இரட்டை இலை சின்னத்தில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக இருந்தாலும் ஆதரவு கொடுப்போம். உச்சநீதிமன்றம் எங்கள் தரப்பிற்கும் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அனுப்ப கூறியுள்ளது. ஆனால் இன்னும் எங்களுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளோம்" என கூறினார்.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.4) வெளியிட்ட செய்திகுறிப்பில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் முருகனை, அஇஅதிமுக வின் கழக அமைப்பு செயலாளராக நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

இதையும் படிங்க: "இடைத்தேர்தலை இரட்டை இலையில் அதிமுக எதிர்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை

உச்சநீதிமன்றத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ் தரப்பு மற்றும் ஈபிஎஸ் தரப்பு ஆகிய ஆகியோரில் யாருக்கு என்று நேற்று நடந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு எடுக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், அக்கட்சியின் பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இதில் முடிவெடுக்கலாம் என்றுள்ளது.

அதே நேரத்தில், அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் அணிக்கும் அழைப்பு தரலாம் என ஈபிஎஸ் தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒருவகையில் இரு அணிகளாகப் பிரிந்த அக்கட்சியின் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரையும் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இணைந்து பணியாற்ற செய்வதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இரண்டு தரப்பினரும் இந்த இடைத்தேர்தலில் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை மறந்து மீண்டும் ஓரணியில் இணைந்து, எதிர்க்கட்சியாக இருந்து தங்களது பணியையும் அதே நேரத்தில் திமுகவையும் எதிர்த்து தேர்தல் களமாடுவார்கள் என எதிர்ப்பார்ப்புகள் மக்களிடையே கிளம்பியுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு அணிகளும் இணைவதும் தங்களின் ஒற்றுமையில் திமுகவை எதிர்ப்பதும்; அக்கட்சியே தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியினர் உறுதிப்படுத்தும் களமாக ஈரோடு கிழக்கு தொகுதி மாறியுள்ளது.

இதையும் படிங்க: "கனமழையால் சேதமான நெற்பயிருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்குக"- ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.