ETV Bharat / state

வெறும் ஒலி, ஒளி அறிவியல் பூர்வமானது அல்ல - கி. வீரமணி

author img

By

Published : Apr 4, 2020, 5:28 PM IST

k.veeramani
k.veeramani

சென்னை: மருத்துவ மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்ற போகிறார் என்ற செய்தி வந்தவுடன், மாநில முதலமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் விரிவாக்கம், அதற்கேற்ப மாநில அரசு கூடுதல் நிதி உதவி, நிதித்துறை மூல மக்களின் அவதிகளைப் போக்கும் வகையில் பல புதிய அறிவிப்புகளை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே தந்தது.

வெறும் ஒளி, ஒலி காட்சிகளின் மூலம் நாடு ஒன்றுபட்டு உள்ளது என்பது, நாளை 9 மணிக்கு 9 நிமிடங்கள் இருட்டில் ஒளி பாய்ச்சுதல் என்பது ஒரு நல்ல அடையாளமாகக் கூட இருக்கலாம். ஆனால், இது அறிவியல் பூர்வமானது அல்ல. ஆக்கப்பூர்வ எதிர்பார்ப்புகளை அது எந்த அளவில் நிறைவேற்ற உதவும் என்ற கேள்வி, பல பக்கங்களிலிருந்து கிளம்புகிறது.

எனவே, அடுத்தக் கட்ட பொருளாதாரச் சிக்கல் தீர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, நிதி நிலைமை பற்றி ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மக்களுக்கு அறிவிப்பது அவசரத் தேவையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் ஆய்வகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.