ETV Bharat / state

திருமண உறவு, காதல் போன்ற போக்சோ வழக்கில் அவசரம் வேண்டாம் - டிஜிபி ஆணை!

author img

By

Published : Dec 4, 2022, 10:01 PM IST

Updated : Dec 5, 2022, 12:58 PM IST

dgp sylendra babu  POCSO accused  District SP  SP authorization to arrest POCSO accused  dgp  dgp sylendra babu statement  போக்சோ குற்றவாளி  போக்சோ  மாவட்ட எஸ்பி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டிஜிபி சைலேந்திர பாபு  தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை  அறிக்கை  சைலேந்திர பாபு  தமிழ்நாடு காவல்துறை தலைவர்
சைலேந்திர பாபு

போக்சோ வழக்குகளில் குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், "உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதில், 'திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்குப் பதிலாக கு.வி.மு.ச பிரிவு 41(4)ன் படி சம்மன் அனுப்பி குற்றவாளிகளை எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம், வழக்கு கோப்பில் பதிவு செய்தும் அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும்.

முக்கிய வழக்குகளில் இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிகை) உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காதலுக்காக சிறை செல்லும் பழங்குடிகள் - கலாசாரத்தை அழிக்கிறதா போக்சோ?

Last Updated :Dec 5, 2022, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.