ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழகத்திற்கு A++ அங்கீகாரம் வழங்கிய NAAC; பட்டாசு வெடித்து கொண்டாடிய பேராசிரியர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:43 PM IST

சென்னை பல்கலைக்கழகத்திற்கு NAAC A++ அங்கீகாரம் வழங்கியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய பேராசிரியர்கள்
சென்னை பல்கலைக்கழகத்திற்கு NAAC A++ அங்கீகாரம் வழங்கியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய பேராசிரியர்கள்

Madras University: சென்னை பல்கலைக் கழகத்திற்கு Aல் இருந்து A++ தரத்திற்கு NAAC குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு NAAC A++ அங்கீகாரம் வழங்கியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய பேராசிரியர்கள்

சென்னை: அண்மையில் NAAC (National Assessment and Accreditation Council) குழு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியது. இதனை அடுத்து A++ மதிப்பீட்டை வழங்கி உள்ளது. இதனை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தேசிய தர மதிப்பீட்டு குழு ஆராய்ச்சி, தேர்ச்சி விகிதம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தர மதிப்பீட்டை வழங்குகிறது.

நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் மற்றும் தர மதிப்பீட்டு அமைப்பை பொறுத்து NAAC ஏ ப்ளஸ் ப்ளஸ் (A++), ஏ ப்ளஸ் (A+), ஏ (A) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர மதிப்பீட்டை வழங்குகிறது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு NAAC குழுவால் ஏ மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது.

இதனை அடுத்து சென்னை பல்கலைக் கழகத்திற்கு (A++) ஏ பிளஸ் பிளஸ் தர மதிப்பீட்டை வழங்கி உள்ளது. சென்னை பல்கலைக் கழகம் தேசிய தரம் மதிப்பீட்டால் வழங்கப்படும் 4 மதிப்பெண்களில் 3.59 பெற்று உள்ளது. இதன் மூலம் பல்கலைக் கழகம் மானிய குழு விதியின்படி தன்னாட்சி பல்கலைக் கழகமாக தேசிய அளவில் செயல்படுவதற்கான தகுதியை பெற்றுள்ளது. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: பி.இ., பி.டெக். இடங்களை தேர்வு செய்வதற்கான மூன்றாம் சுற்று விருப்பப்பதிவு நாளை துவக்கம்!

மேலும் பல்கலைக் கழகம் நிதி நிலையில் சிக்கி தவிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு வந்து கொண்டிருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் நிதித் தேவைகளை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசின் அனுமதியின் அடிப்படையில் கட்டணங்கள் ஆராய்ச்சிக்கு உயர்த்தப்பட்டு உள்ளன. தென்னிந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம் சென்னை பல்கலைக் கழகம்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தான் மருத்துவம், பொறியியல், சட்டம், நிர்வாகவியல், கலை மற்றும் அறிவியல் என அனைத்து பாடத்திட்டங்களும் கற்பிக்கப்பட்டன. பின்னர் நிர்வாக வசதிக்காக மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகியவற்றிற்கு தமிழ்நாட்டில் தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் நேரடியாக நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவ படிப்புகளுக்கு பி.யு.சி. தகுதியில்லையா? பி.யு.சி. படித்தவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.