ETV Bharat / state

பி.இ., பி.டெக். இடங்களை தேர்வு செய்வதற்கான மூன்றாம் சுற்று விருப்பப்பதிவு நாளை துவக்கம்!

author img

By

Published : Aug 21, 2023, 4:48 PM IST

பிஇ பிடெக் இடங்களை தேர்வுச் செய்ய 3 ஆம் சுற்று விருப்பப்பதிவு  நாளை துவக்கம்!
பிஇ பிடெக் இடங்களை தேர்வுச் செய்ய 3 ஆம் சுற்று விருப்பப்பதிவு நாளை துவக்கம்!

Engineering admission: பி.இ., பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 3ஆம் சுற்றில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கலந்தாய்வு, நாளை(ஆகஸ்ட் 22) முதல் துவங்குவதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

சென்னை: பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் 3 ஆம் சுற்றில் சேருவதற்கு பொதுப் பிரிவு மாணவர்கள் நாளை (ஆகஸ்ட் 22) முதல் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கலந்தாய்வு துவங்குகிறது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

பொதுப்பிரிவு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பட உள்ளது.
அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 12,059 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு.. விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்!

முதல் கட்ட பொது கலந்தாய்வின் மூலம் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்தனர். 2 ஆம் சுற்று கலந்தாய்விற்கு www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தனர்.

பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் 22 ஆயிரத்து 762 ஆவது இடம் தொடங்கி 87 ஆயிரத்து 49 வரையில் உள்ள 64 ஆயிரத்து 332 மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 49 ஆயிரத்து 719 மாணவர்கள் விரும்பும் கல்லூரியையும், பாடப்பிரிவையும் பதிவு செய்தனர். அதில் 26 ஆயிரத்து 940 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் 9,103 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டில் இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசை பட்டியலில் 1075 முதல் 8586 வரை 7,952 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 4,177 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 1,214 மாணவர்களுக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 22 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு இடங்கள் அறிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடந்து 3ஆம் சுற்றுக் பொதுப்பிரிவு கலந்தாவிற்கு 141.86 முதல் 77.50 மதிப்பெண்கள் வரை பெற்று தரவரிசைப் பட்டியில் 87,050 முதல் 1,76,744 வரை பெற்ற 89 ஆயிரத்து 694 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 8,587 முதல் 27,866 வரை பெற்ற 19,279 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம். தற்காலிக ஒதுக்கீட்டை ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் உறுதி செய்ய வேண்டும். கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகள் 27 ஆம் தேதி வெளியிடப்படும்.

அதனைப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேரலாம் அல்லது மேல்நோக்கிய நகர்வில் வேறுக் கல்லூரியில் சேர்வதற்கும் விருப்பங்களை பதிவு செய்யலாம். செப்டம்பர் 3 ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 90th year anniversary of Mettur Dam: 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.