ETV Bharat / state

என்னுடைய பெயரும் இறையன்பு தான்: சாலை வசதி கேட்டு தலைமைச் செயலாளருக்கு 6 ம் வகுப்பு மாணவன் கடிதம்!

author img

By

Published : Jun 30, 2023, 3:30 PM IST

irai anbu
இறையன்பு

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்புக்கு, சாலை வசதி கேட்டு ஆறாம் வகுப்பு மாணவன் இறையன்பு கடிதம் எழுதி உள்ளான்.

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒய்வு பெற உள்ள கடைசி 2 தினங்களுக்கு முன்னர் தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்த 6 ம் வகுப்பு மாணவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல் பேனா பரிசளித்து ஊக்கப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு இன்று (ஜூன் 30ஆம் தேதி) உடன் ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் அ.இறையன்பு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: கிண்டிக்கு ஒரு கேள்வி? - சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அந்த கடிதத்தில், வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு. நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக என் பெற்றோர்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்து உள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வகுப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டு உள்ளேன்.

ஐயா நானும், எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு, மழைக்காலங்களில் மிகவும் குண்டும் குழியாகவும் மாறி விடுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பலர் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவு கூர்ந்து எங்கள் தெருவிற்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் எழுதி தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவிற்கு கோரிக்கை வைத்து உள்ளார். மேலும், அந்த கடிதத்துடன் மானவர் இறையன்பு தன் பெயரியுள்ள ஆதார் அட்டை நகலையும் இனத்து அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தனக்கு கடிதம் எழுதிய மாணவனையும், அவரது குடும்பத்தினரையும் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து உரையாடினார். அப்போது, சாலை வசதி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவருக்கு பேனா பரிசு அளித்து மாணவன் இறையன்புவை நன்றாக படிக்குமாறும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். ஆறாம் வகுப்பு மாணவன் எழுதி உள்ள கடிதம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Pan Aadhar link: பான் - ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்.. இனி சிக்கல்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.