ETV Bharat / state

காவிரி நதிநீர் விவகாரம்: தமிழ்நாடு எம்பிக்கள் மத்திய அரசிடம் நாளை கோரிக்கை மனு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 10:20 PM IST

Etv Bharat
Etv Bharat

TN MPs: தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.

சென்னை: இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.18) நேரில் சந்திக்கவுள்ளார்.

  • தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி,தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை(18.9.23) கோரிக்கை மனு அளிப்பார்கள்#CMMKSTALIN #TNDIPR pic.twitter.com/hnazQyh7be

    — TN DIPR (@TNDIPRNEWS) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் நாளை மாலை சந்தித்து, கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குத் தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில், டி.ஆர்.பாலு, எஸ்.ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை மற்றும் என்.சந்திரசேகரன் (அதிமுக), சிபிஐ கே.சுப்பராயன், பி.ஆர்.நடராசன் (சிபிஎம்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (இயூமுலீ) மற்றும் ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகியோர் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளனர்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘அமைச்சர் துரைமுருகன் உடன் மத்திய அமைச்சரை சந்திப்போம்’ - காவிரி விவகாரம் குறித்து ஜி.கே.வாசன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.