ETV Bharat / state

குரூப் 4 தேர்வு - 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்

author img

By

Published : Jul 22, 2022, 10:49 PM IST

குரூப் 4 தேர்வு
குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணிகளில் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 24ஆம் தேதி காலையில் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வினை 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 தேர்வர்கள் எழுத உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவலில், அரசின் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது.

அதில் பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்;பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பொழுது தமிழ் மொழித்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, தேர்வர்களின் பகுதி இரண்டு விடைத்தாள்கள் திருத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வினை 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண் தேர்வுகளும், 131 திருநங்கைகளும், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் 6,635 பேர் எழுத உள்ளனர்.

இதற்காக 7, 689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு பணியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 150 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1,932 பறக்கும் படைகள், 534 சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி மூலமாகவும் 7,689 இடங்களில் இருந்து வரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.சென்னையில் 53 மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் எழுதுகின்றனர் . தேர்வினை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்வதற்கான சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன தேர்வு அன்று மின்சாரம் தடை இன்றி வழங்குவதற்கும் மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வினை எழுத சொல்வார்கள் சிறப்பு போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.