ETV Bharat / state

அம்பத்தூரில் போலீசாரை அடிக்க துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு.. 5 வடமாநில தொழிலாளர்கள் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:20 AM IST

Ambattur Police attack issue
அம்பத்தூரில் போலீசாரை தாக்கிய வட மாநிலத்தவர்கள் 5 பேர் கைது

Ambattur Police attack issue: அம்பத்தூரில் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில், போலீசாரைத் தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பத்தூரில் போலீசாரை அடிக்க துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

சென்னை: அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த தொழிற்சாலையில் ஆயுத பூஜை விழா இரவில் நடைபெற்றுள்ளது. அப்போது, அங்கு இருந்த 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் அறிந்து வந்த அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் நேரில் விசாரிக்கச் சென்றனர். பின், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், காவலரை கற்களால் சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. மேலும் போலீசார் வந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் படுகாயம் அடைந்த காவலர் ரகுபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தொழிற்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து, இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல், போலீசாரை தாக்கியது தொடர்பாக, தற்போது 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது ரோஷன் குமார், பிளாக் தாஸ், பின்டு, ராம்ஜித் மற்றும் சுராஜ் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரு தரப்பினரின் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சியில், போலீசாரை வட மாநில இளைஞர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடுகளைக் கொண்டு துரத்தக் கூடிய காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.