ETV Bharat / state

'தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என கடிதம் எழுதிவைத்து மருத்துவ மாணவி தற்கொலை

author img

By

Published : Feb 15, 2023, 3:37 PM IST

'தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ என கடிதம் எழுதிவைத்து மருத்துவ மாணவி தற்கொலை
'தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ என கடிதம் எழுதிவைத்து மருத்துவ மாணவி தற்கொலை

தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை: கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர், ராமசுப்பு(64). மெட்ரோ ரயில் அட்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இளைய மகள் நித்யஸ்ரீ கே.கே. நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நடைபயிற்சி சென்று விட்டு, வீட்டிற்குத் திரும்பிய நித்யஸ்ரீ, திடீரென 10வது மாடி படிக்கெட்டில் இருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மாணவி நித்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர், மகள் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனே அசோக் நகர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பு வீட்டில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது தற்கொலை நானே எடுத்த முடிவு எனவும், தனது பெற்றோர் நல்லவர்கள் எனவும்; அடுத்த மாதம் நீங்கள் திட்டமிட்டப்படியே யூரோப் சுற்றுலா செல்லுங்கள், என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இன்று செமஸ்டர் தேர்வு நடக்கின்ற சூழலில், கடந்த இரண்டு நாட்களாக நித்யஸ்ரீ சரியாகப் படிக்கவில்லை அரியர் வைத்துவிடுவோம் என்ற அச்சத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. மாணவியின் தற்கொலைக்கு காரணம் செமஸ்டர் தேர்வு பயமா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: tneb aadhaar link :மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க இன்றே கடைசி நாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.