ETV Bharat / state

போதை மருந்துக்காக மருந்துக்கடைகளில் திருடிய இளைஞர் கைது

author img

By

Published : Jan 26, 2021, 9:14 PM IST

arrested
arrested

சென்னை: போதை மருந்துக்காக மருந்துகடைகளை குறிவைத்து திருடி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை விஎஸ் முதலி தெருவில் ஸ்ரீ வசந்தம் மெடிக்கல்ஸ் என்ற மருந்துக்கடை நடத்தி வருபவர் ரமேஷ். டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு, இவரின் கடை பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணம், மருந்துப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அது தொடர்பாக ரமேஷ் சைதாப்பேட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையன் ஒருவன் மருந்துக்கடையில் கொள்ளையடித்து விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதியன்று குமரன் காலனியில் உள்ள ஸ்ரீ பாலாஜி மெடிக்கல்ஸ், அதன் தொடர்ச்சியாக 15ஆம் தேதி மேற்கு மாம்பலம் எத்திராஜ் நகரில் உள்ள நியூ தமிழ்நாடு மருந்துக்கடையின் பூட்டை உடைத்து பணம், மாத்திரைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இளைஞர் ஒருவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள்

குமரன் ஸ்டோரின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 4ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்தது. மேலும் குமரன் நகர் பகுதியில் 19ஆம் தேதியன்று எத்திராஜ் நகரில் தொடர்ச்சியாக தனபால் தெருவிலும் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 38 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது.

இது போன்ற தொடர்ச்சியான புகார்கள் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து வந்தது. சைதாப்பேட்டை உதவி ஆணையர் அனந்தராமன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சியை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதனை வைத்து ஆதம்பாக்கம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்ற அருண் குமார் என்பவர் தான் இந்தத் தொடர் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்களை வெளியாகி உள்ளது.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-medicalshopttheft-script-7202290_26012021175318_2601f_1611663798_86.jpg
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம்

Tapentadol என்ற சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளை பிங்கி போதை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளார். 8 முதல் 10 மாத்திரைகளை நீருடன் கலந்து சிரஞ்சுகள் மூலம் உடலில் ஏற்றுவதால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போதை ஏற்படும். அந்தப் போதைக்கு அவர் அடிமையாகியுள்ளார். இதனால் பூட்டிய மருந்து கடைகளை பார்த்து இரவில் நோட்டமிட்டு பூட்டை உடைத்து டேபன்டால் மாத்திரைகள், கல்லாவில் உள்ள பணத்தை திருடியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எப்போதும் தனியாளாக சாதாரணமாக பதட்டம் இல்லாமல் கடைகளின் ஷட்டரை உடைக்கும் அருண்குமார், பணத்தை மட்டும் திருடிவிட்டு சென்று விடுவார். இவருக்கு டாட்டூ பாபு என்பவர் இரு சக்கர வாகனங்களை திருடி வழங்கியுள்ளார். டாட்டூ பாபு ஏற்கனவே பள்ளிக்கரணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அருண்குமாரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அருண் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.