ETV Bharat / state

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தயார்: சென்னை மேயர் பிரியா

author img

By

Published : Dec 23, 2022, 10:13 PM IST

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை தயார்: மேயர் பிரியா
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை தயார்: மேயர் பிரியா

சென்னையில் இதுவரை கோவிட் தொற்று பாதிப்பு இல்லை, தொற்று பரவாமல் தடுக்க அனைத்து வகையிலும் சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தயார்: சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், 281 சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 99 லட்சத்து 849 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் ஒரு நடமாடும் மருத்துவ வாகனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பல் தொடர்பான மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு முகாம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கு உறுதுணையாக சென்னை ரோட்டரி சங்கம் நடமாடும் மருத்துவ வாகனம் ஒன்றை வழங்கியுள்ளது. இந்த வாகனம் மூலம் ஒவ்வொரு பள்ளிகளிலும் முகாம் அமைத்து, மாணவர்களுக்கு பல் தொடர்பான அனைத்து வகையான சிகிச்சைகளும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கோவிட் 19 தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், சென்னையில் இதுவரை கோவிட் தொற்று பாதிப்பு இல்லை. கோவிட் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து வகையிலும் சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படி கோவிட் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.