ETV Bharat / state

Chandrayaan-3: சந்திரயான்-3 சந்திக்கும் சவால்கள் என்ன?.. சந்திரயான்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:14 AM IST

Updated : Aug 23, 2023, 10:45 AM IST

Chandrayaan-3
சந்திரயான் 3

Chandrayaan-3: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து சந்திரயான் ஒன்றின் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விளக்குகிறார்.

சந்திரயான்-3 சந்திக்கும் சவால்கள் என்னென்ன என சந்திராயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விளக்குகிறார்

சென்னை: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவது மிகப் பெரும் சவாலான ஒன்று. ரஷ்யாவின் லூனா-25 நிலவில் தரையிறங்குவதில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது சந்திராயன்- 3ல் இந்தியா செலுத்தி இருக்கும் விக்ரம் லேண்டர் வரும் புதன்கிழமை மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

விக்ரம் லேண்டருடன், நிலவை ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஏன் இஸ்ரோ தேர்வு செய்தது, -230 செல்சியஸ் கடுங்குளிர் நிலவும் அங்கு தரையிறங்குவதில் உள்ள சவால்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார் சந்திராயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

தென்துருவம் ஏன் தேர்வானது: "நிலவில் தரையிறங்க ஏன் தென் துருவம் தேர்வானது?. பிற நாடுகளும் ஏன் நிலவின் தென் துருத்தையே குறிவைக்கின்றன?. அப்படி தென் துருவத்தின் முக்கியத்துவம் என்ன?. நிலவின் முழுமையை அறிய அதன் துருவப் பகுதிகளைக் குறித்த தரவுகள், தகவல்கள், புரிதல் தேவை. இதுவரையிலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா மேற்கொண்ட ஆய்வுகள் சூரிய ஒளிவீசும் சந்திரனின் மையப்பகுதியை ஒட்டியே உள்ளன.

எனவே சந்திரயான் 1லேயே வித்தியாசமாக ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நிலவின் தென் துருவப் பிரதேசம் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. சந்திராயன் ஒன்றுதான் தென் துருவத்தில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது. உறைபனியாக நிலத்திற்கடியிலும், மேற்பரப்பில் நீர்த் துகள்கள்களாவும் நீர் இருப்பது உறுதியானது. நிலவில் தரையிறங்குவதே மிகவும் கடினமான சாவாலான ஒன்று.

தென் துருவத்தில் தரையிறங்குவதில் உள்ள சவால்கள், சிக்கல்கள் என்ன : நிலவின் துருவ வட்டப்பதையை அடைவதே கடினமான ஒன்று. துல்லியமான பாதையில் சென்றால் மட்டுமே சாத்தியம். அப்படி அடைந்தாலும், இறங்குவது இன்னும் சிரமமான ஒன்று. மலை முகடுகள் இல்லாத பெரும் பள்ளங்கள், பாறைகள் கற்கள் இல்லாத சமவெளிப்பகுதியைக் கண்டுபிடித்து இறங்கும் ஆரம்பக்கட்டமே சவலான ஒன்று.

நிலவின் மலைகள், 9 கிலோ மீட்டர் உயரம் உள்ளவை. இதுவரை 30 செ.மீ துல்லியமான நிலவின் மேற்பரப்பு நமக்கு உள்ளது. ஆனால், நாளை நிலவில் இருந்து எதுவும் கொண்டு வரவேண்டும் என்றால் நீராதாரம் உள்ள பகுதியே வருங்கால ஆய்வுகளுக்கு ஏற்றது.

நிலவு, செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக விண்கலங்களைச் சுற்றிவரச் செய்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் சூழலில், தரையிறங்குவதில் எழும் சிக்கல்கள் என்ன? : அந்த சவால்களை இஸ்ரோ எதிர்கொண்டு வருவது எப்படி? சந்திரயான் - 3 எவ்வாறு இதனை எதிர்கொள்கிறது? : சுற்றுப்பாதையில் மிக வேகமாக சுற்றி வரும் விண்கலத்தின் வேகத்தை குறைத்தால்தான் தரையிறக்க முடியும். அப்படி வேகத்தை குறைக்கும்போது, நிலவின் ஈர்ப்புவிசைக்கு உள்ளாகும். விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் அதே நேரம், அது மற்றொரு விசைக்கு ஆட்படுகிறது.

இந்த சூழலில் தரையிறக்குவது மிகவும் சவாலான, சிக்கலான ஒன்று. மேலும், நிலவைப் பற்றி நமக்கு இருப்பது லேண்டர் அனுப்புகிற புகைப்படங்கள் மட்டுமே. அவற்றைக் கொண்டே நாம் லேண்டரைத் தரையிறக்க வேண்டும். முதன்முதலாக, தெரியாத இடத்தில், ஆளில்லாத கலனை மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் துருவப்பகுதியில் தரையிறக்க வேண்டும்.

குறிப்பிட்ட இடத்தில் இறங்க முடியாமல் போனாலோ, அதற்கு முன் எரிபொருள் தீர்ந்துவிட்டாலோ, பேட்டரியின் சக்தி குறைந்து விட்டாலோ தவறிப்போகும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த தவறுகள் இல்லாமல் இறங்க வேண்டியது ரொம்ப முக்கியம். அது மிக மிக சவால், அதுவும் துருவப்பகுதியில் கடினம்.

சந்திரயான் - 2 ஆர்பிட்டர் எவ்வாறு, சந்திரயான் 3க்கு உதவும்? Propulsion Module ஒரு Orbiter போல செயல்படுமா? SHAPE: இதன் முக்கியத்துவம் என்ன? புவி ஆய்வுடன், இப்புவிக்கோளத்தையும் கடந்து உயிர்வாழ்வதற்கு ஏற்ற வேறு கோள்களைக் கண்டறியும் முயற்சியா? : சந்திரயான் - 2 Orbiter இன்னும் செயல்பாட்டில் உள்ளது. ரோவர் தரும் சமிக்ஞைகளை தரக் கட்டுப்பாடு நிலையத்துக்கு அனுப்பும் ரிலே பணியை அது இனி செய்யும். உந்துவிசை கலனில் (Propulsion Module) நிலவில் இருந்து புவியை ஆய்வு செய்யும் பொலாரி மீட்டர் தொழில்நுட்பம் உள்ளது. சூரிய குடும்பத்தைக் கடந்து புவியைப் போன்ற உயிர்வாழ ஏற்ற கோள்கள் (Exo Planets) உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யும்" இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

இதையும் படிங்க: Chandrayaan-3: சந்திரயான்-3 லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியீடு!

Last Updated :Aug 23, 2023, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.