ETV Bharat / state

அடுத்தடுத்து குறைந்து வரும் தங்கம்! என்னதான் காரணம்? நிபுணர்கள் சொல்வது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 2:00 PM IST

தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை…நிபுணர்கள் சொல்வது என்ன?
தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை…நிபுணர்கள் சொல்வது என்ன?

Gold rate: கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வரும் நிலையில், சந்தை நிபுணர் சண்முக விஜயகுமார் தங்கத்தின் விலை சரிவிற்கான காரணத்தை இச்செய்தி தொகுப்பில் விளக்குகிறார்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 6ஆவது நாளான இன்று (செப். 30) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

தங்கம் விலை: இன்று காலை சந்தை தொடங்கிய உடன், வெளிநாட்டு வர்த்தக சந்தையில், டாலரில், மூதலீடு அதிகமாக தொடங்கியது. இதனால், இன்று தங்கம் விலை சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,360-க்கும் அதேபோல், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,640-க்கு விற்பனையாகிறன.வெள்ளி விலை ரூ.1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை 150 குறைந்து. ரூ.76,000-க்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் தங்கத்துக்கு பதில் டாலரில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவையும் அதில் முதலீடு செய்பவர்களும் குறைந்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது. தங்கம் விலை பொதுவாக, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், உலகளாவிய சம்பவங்கள் என உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்த வரை, எப்போதும் தங்கத்தின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் அதை ஒரு முதலீடாகவும் பார்க்கபடுகின்றனர். இது குறித்து ஈடிவி பாரத், சந்தை நிபுணர் சண்முக விஜயகுமார் அவர்களை கேட்டப்போது, “இந்தியாவில் தங்கத்தின் விலை சரிவுக்கு அமெரிக்க பொருளாதாரம் மிக முக்கியமாக ஒன்று இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க வங்கி தொடர்ந்து திவால் ஆகி வந்தன.

டாலரில் முதலீடு: இதனைத் தொடர்ந்து, டாலரில் மூதலீடு செய்பவர்கள் குறைந்து அனைவரும் தங்கத்தின் பக்கம் திரும்பினர். இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. தற்போது,அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீளத் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு டாலரின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், சர்வதேச பங்குச் சந்தையில், தங்கத்துக்கு பதில், டாலரில் முதலீடு செய்கிறார்கள்.

இதனால் தங்கத்தின் தேவையானது குறைந்து வருகிறது. தேவை குறைந்தால், தங்கத்தின் விலையும் உலக அளவில் குறைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் சர்வதேச சந்தையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அவுன்ஸூக்கு $1,874.57 இருந்த விலை இன்று காலை சர்வதேச கமாடிட்டி சந்தை, தொடங்கிய நிலையில் $,1,848.82 குறைந்துள்ளது. மேலும். இந்த விலை குறைவுக்கு இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய காரணமாக இருந்து வருகிறது.

ஏனென்றால், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து, வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய ரூபாய்க்கு அமெரிக்க டாலரின் மதிப்பு 82.689 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி 83.030 ஆக இருக்கிறது. இதனால், டாலரின் மதிப்பு உலக அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் டாலரீல் முதலீடு செய்வது அதிகமாக இருந்து வருகிறது. இனி வரும் காலத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தால், இந்த விலை தங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

இந்த சரிவை குறித்து, மெட்ராஸ் தங்க, வைர வியாபரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில் ," தங்கம் விலை என்பது, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைபாடு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் என உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கம் விலை என்பது, தினமும் ஏற்றம் இறக்கம் கொண்டு தான் இருக்கும். மேலும், தற்போது, டாலரின் மதிப்பும், இந்தியா ரூபாயின் வீழ்ச்சியும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை, 44,360-க்கு இருந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில், 1,480 வரை குறைந்து, இன்று 42,880 வரை குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Family Budget plan in Tamil: உயரும் செலவுகள்! சேமிப்பது எப்படி.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.