ETV Bharat / state

தமிழ்நாட்டிற்காக ஆஸ்கர் பெற்றது மகிழ்ச்சி - ரூ.1 கோடி ஊக்கத்தொகை பெற்ற "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" இயக்குநர் நெகிழ்ச்சி

author img

By

Published : Mar 21, 2023, 6:07 PM IST

தமிழ்நாட்டிற்காக ஆஸ்கார் விருது வாங்கியதில் மகிழ்ச்சி.."தி எலிஃபான்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தின் இயக்குநருக்கு முதல்வர் மரியாதை
தமிழ்நாட்டிற்காக ஆஸ்கார் விருது வாங்கியதில் மகிழ்ச்சி.."தி எலிஃபான்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தின் இயக்குநருக்கு முதல்வர் மரியாதை

"தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" எனும் ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருது வாங்கிய இந்தியாவைச் சார்ந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸை பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.

தமிழ்நாட்டிற்காக ஆஸ்கர் பெற்றது மகிழ்ச்சி - ரூ.1 கோடி ஊக்கத்தொகை பெற்ற "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" இயக்குநர் நெகிழ்ச்சி

சென்னை: ஒரு பெண்ணாக இருந்து இந்த ஆஸ்கர் விருதை வாங்கியது பெருமை அளிப்பதாகவும், தமிழ்நாட்டிற்காக ஆஸ்கர் விருது வாங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளது எனவும் "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திக்கு கோன்சால்வ்ஸ் தெரிவித்தார்.

அறிமுக இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய ஆவணப்படமாக வெற்றி பெற்று பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளது.

தாயை இழந்த ஆதரவற்ற குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இன தம்பதிகளுக்கும் இடையிலான பாசப்போராட்டத்தை விவரிக்கும் இந்த ஆவணப்படம், கடந்த மார்ச் 12-ல் 95-வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவண குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டிற்காக விருது வாங்கியதும் பழங்குடியினர் வாழக்கூடிய பகுதிக்கு சென்று ஆவணப்படம் எடுத்ததும் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக கார்த்திகி கோன்சால்வ்ஸ் தெரிவித்தார். ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக்குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நேரில் அழைத்து கெளரவித்தார்.

இதைத்தொடர்ந்து உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று அவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். பின்னர், தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு வழங்கப்பட்டது.

மேலும் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு அன்பளிப்பாக திரைப்படத்தில் நடித்த யானையின் உருவச்சிலை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி, தமிழ்நாட்டிற்காக ஆஸ்கர் விருது வாங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளது எனவும் பழங்குடியினர் வாழக்கூடிய பகுதியில் இந்த ஆவணப்படம் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் ஒரு பெண்ணாக இருந்து இந்த ஆஸ்கர் விருதை வாங்கியது குறித்து பெருமை அடைகிறேன் என்றார்.

இதையும் படிங்க: சிறுதானியங்களுக்கு சிறப்பு கவனம்..! பனைக்கு ஆராய்ச்சி மையம்..! வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்!


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.