ETV Bharat / state

IFS Scam: ஐஎப்எஸ் நிதி மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமனம்!

author img

By

Published : Apr 20, 2023, 2:27 PM IST

IFS Financial Fraud case investigating officer DSP Kabilan suspended and ADSP Justin Raj appointed as the investigating officer
ஐ எப் எஸ் நிதி நிறுவன வழக்கை விசாரித்த அதிகாரி டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஏடிஎஸ்பி ஜஸ்டின் ராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

6000 கோடி ரூபாய் மோசடி செய்த ஐ.எப்.எஸ் நிதி நிறுவன வழக்கை விசாரித்து வந்த அதிகாரி லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி 84,000 நபர்களிடம் சுமார் 6,000 கோடி முதலீடு பெற்று ஏமாற்றிய ஐ.எப்.எஸ் நிறுவனத்தின் மீதான விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 19 பேர் மீது வழக்குபதிவு செய்து நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வழக்கு தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து 1.12 கோடி ரொக்கம், 34 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், 16 கார்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க நிர்வாகிகளிடமிருந்து 5 கோடி ரூபாய் பேரம் பேசி 32 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டி.எஸ்.பி கபிலனிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்ற போது 32 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து டி.எஸ்.பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மோடக் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டிஎஸ்பி கபிலன் லஞ்சம் பெற்ற இவ்வழக்கை விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புதுறை போலீசாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் லஞ்சம் பெற்ற புகாரில் ஐ.எப்.எஸ் விசாரணை அதிகாரி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல அதிகப்படியான புகார்கள் வருவதால் ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த ரகுபதி என்பவர் மாற்றப்பட்டு புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பழனி அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை: குற்றவாளி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.