ETV Bharat / state

சோவியத் முதல் ராஜ்பவன் வரை.. பெட்ரோல் குண்டு கடந்து வந்த பாதை...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 2:35 PM IST

History of the petrol bomb
சோவியத் முதல் ராஜ்பவன் வரை.. பெட்ரோல் குண்டு கடந்து வந்த பாதை..

History of the petrol bomb: சோவியத் முதல் ராஜ்பவன் வரை பெட்ரோல் குண்டு எனப்படும் 'மொலோடோவ் காக்டெய்ல்' கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு எனப்படும் மொலோடோவ் காக்டெய்ல் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசும் பொருளாக உள்ளது. இது தொடர்பாக ரவுடியான கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை ஐபிசி 124ன் கீழ் பதிய வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில், தமிழக காவல் துறையைத் தமிழக ஆளுநர் மாளிகை விமர்சித்து வருவதால் இந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. ஆனால் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய தாக்குதலா? என்று மக்கள் நினைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த மொலோடோவ் காக்டெய்ல் என்றால் என்ன? என்பது பலரது மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

இந்த மொலோடோவ் காக்டெய்ல் கடந்து வந்த பாதை: இந்த மொலோடோவ் காக்டெய்ல் முதன் முதலில், 1936-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஸ்பானிய உள்நாட்டுப் போரில் தான் உபயோகிக்கப்பட்டது என்ற வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கிறது.

இதற்கு அதிகாரப்பூர்வ பெயரான 'மொலோடோவ் காக்டெய்ல்' எனப் பெயரிடப்பட்டது. எப்போது என்றால் சோவியத்திற்கும் - பின்லாந்துக்கும் 1939ஆம் ஆண்டின் இடைய நடைபெற்ற பனிப்போரில் சோவியத் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களானது நடைபெற்றது.

இதற்குச் சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் 'வியாசஸ்லாவ் மொலோடோவ்' ஊடகங்களில், "நாங்கள் வான்வெளி தாக்குதலை நடத்தவில்லை அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், வானத்திலிருந்து உணவுகளை அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான பதில் தாக்குதலில் சோவியத்தின் பீரங்கிகளில் வீசப் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் குண்டுகளுக்கு 'மொலோடோவ் காக்டெயில்' என்று பின்லாந்து வீரர்கள் பெயர் வைத்தனர்.

அனைத்துப் போர்களிலும் மொலோடோவ் காக்டெயில்: 1940-ஆம் ஆண்டு பிரிட்டன் வீரர்களுக்கு மொலோடோவ் காக்டெயில் எறிவதற்குப் பயிற்சியானது அளிக்கப்பட்டது. மேலும், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் இந்த மொலோடோவ் காக்டெய்ல் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களையும், அந்த அந்த வட்டார மொழிக்கு ஏற்ப அதன் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்டாலும், இன்றளவும் மொலோடோவ் காக்டெய்ல் என்ற பெயர் நீடித்து வருகிறது.

1992 லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தின் போது கடைகள் மற்றும் பிற கட்டிடங்கள் மீது தீ வைப்புத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவில் மொலோடோவ் காக்டெயில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏன் நம் இந்தியாவில் கூட வங்கதேசத்தில் 2014 தேசியத் தேர்தலின் போதும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போதும் பல பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது மொலோடோவ் காக்டெயில்கள் வீசப்பட்டன.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யா - உக்ரைன் போரில் கூட மொலோடோவ் காக்டெயில்களை தான் பயன்படுத்தினர் என்று தகவலும் உள்ளன.

இப்படி நீண்ட நெடிய வரலாறுகள் கொண்ட மொலோடோவ் காக்டெய்ல் எனப்படும் பெட்ரோல் குண்டு, சமீபத்தில் தமிழக ஆளுநர் மாளிகையின் வாயில் உள்ள தடுப்பு கம்பிக்கு முன் வீசப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு தானாக முன் வந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ-க்கு மாற்றியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளாவில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - என்ஐஏ சோதனை என தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.