ETV Bharat / state

மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட தங்கம்..! எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 2:26 PM IST

மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை
மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை

சர்வதேச பொருளாதர சுழலில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து தற்போது 22 கேரட் தங்கம் ரூபாய் 43 ஆயிரத்து 728க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை: இன்று (ஆகஸ்ட் 23) தங்கம் விலை மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் பவுனுக்கு 43 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாகவே இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை, ஜுலை மாதத்தை ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து வந்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் ஏழாம் தேதி ஒரு சவரன் ரூபாய் 44 ஆயிரத்து 440க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 44 ஆயிரத்து 320க்கு விற்கப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 44 ஆயிரத்து 240க்கு விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை, சிறிது சிறியதாக குறைய ஆரம்பித்தது.

தொடர் சரிவில் 44 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம்: மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூபாய் 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது. ஆனால் தற்போது தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம்: சென்னையில், கடந்த வாரம் முழுவதும், தங்கத்தின் விலை சற்று இறக்கம் கண்டு வந்த நிலையில், மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 6 உயர்ந்து 5 ஆயிரத்து 466 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 48 அதிகரித்து, ரூபாய் 43 ஆயிரத்து 728க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல் வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூபாய் 78.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 78 ஆயிரத்து 500க்கும் விற்பனை ஆகின்றன.

கடந்த இரண்டு நாட்கள்: ஆகஸ்ட் 21 ஆம் தேதி ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 43 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 5 ஆயிரத்து 460க்கு விற்பனையாகிறது. அதேப்போல், சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 43 ஆயிரத்து 680க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.

இனி எப்படி தங்கத்தின் விலை: தொடர்ந்து சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்தது. தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை (Commodity market) பொருத்து இருக்கிறது. இது வரவிருக்கும் நாள்களிலும் தொடருமா? இல்லை மீண்டும் தங்கத்தின் விலை உயருமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. அனைத்து கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.