ETV Bharat / state

சென்னை கனமழை...... பாதிக்கப்பட்ட விமான சேவை

author img

By

Published : Jun 19, 2023, 10:21 AM IST

சென்னையில் விடிய விடிய பெய்து வந்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்று அதிகாலையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

flight issue
flight issue

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சூழ்ச்சியால் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் கனமழை, அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தொடர் மழை காரணமாக சென்னை உட்பட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வீசிய பலத்த காற்றால் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனையடுத்து மரங்களை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழைப் பாதிப்புகள் குறித்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுமட்டுமில்லாமல் நள்ளிரவு முதலே ஊழியர்கள் பணியில் ஈடுபடத் தொடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சாதிச் சான்றிதழ் இல்லாததால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை முயற்சி!

இந்த நிலையில் இடி மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்று அதிகாலையில் இருந்து துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமிட்டு பறந்தன. ஆனால் வானிலை சீரடையாததால் பின்பு 10 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.

மேலும் சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், லண்டன், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால், பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்குத் தகுதி வந்துவிடுமா? - சீமான் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.