ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

author img

By

Published : Jan 31, 2021, 3:06 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம், இதோ...

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm

தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது- பிரதமர் நரேந்திர மோடி

கரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டம் எப்படி ஒரு எடுத்துக்காட்டாக ஆகியுள்ளதோ, அதே போல், தற்போது, நம்முடைய தடுப்பூசித் திட்டமும், உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக ஆகி வருகிறது. ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவண்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார்.

சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடி குறிக்கோள்!

சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

வீடு தேடிவரும் சொட்டு மருந்து - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: இன்று (ஜன .31)போலியோ சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு அடுத்த மூன்று நாள்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்.14 தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். விம்கோ நகர்- திருவொற்றியூர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி- குண்டாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி!

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு; ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வன்னியர் சங்கப் பேரணியில் வாகன கண்ணாடியை உடைத்தவர் கைது!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த வன்னியர் சங்கப் பேரணியின் போது வாகன கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்!

நாடு முழுவதும் இளம்பிள்ளைவாத நோயைத் தடுக்கும் வகையில் இன்று (ஜன.31) 5 வயதிற்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 70 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

'குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சொட்டு மருந்து அவசியம்' - அமைச்சர் வீரமணி

திருப்பத்தூர்: குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்க போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்வது அவசியம் என அமைச்சர் கே .சி வீரமணி தெரிவித்தார்.

பெரம்பலூரில் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து!

பெரம்பலூர்: ஐந்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.